லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தங்கக் கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார் என்றும், முக்கிய ரோலில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பலரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு, நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் கேமியோ கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், ரஜினியின் சமீப கால ஹிட் படங்களுள் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. நெல்சன்தான் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஹுக்கும் என்று பெயரிட இருப்பதாக கூறப்படுகிறது. கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்த பிறகு, ரஜினிகாந்த் ஒரு பிரபல இயக்குநருடன் இணைய இருக்கிறார்.
ரஜினிகாந்தை வைத்து 1991ஆம் ஆண்டில் தளபதி படத்தை இயக்கியவர், மணிரத்னம். தற்போது, கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரஜினியின் பிறந்தநாளையொட்டி, டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.