ஆங்கில புத்தாண்டையொட்டி, ரஜினியை சந்திப்பதற்காக, அவரது ரசிகர்கள் நேற்று காலை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள, அவரது வீட்டின் முன்பு திரண்டனர். வாசலுக்கு வந்து, அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி, தன் இரு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, ரஜினி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின், ரஜினி வெளியிட்ட அறிக்கையில், ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்; ஆனால், கை விட்டு விடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என, கூறியுள்ளார். பாட்ஷா படத்தில், தான் பேசிய வசனத்தை, திடீரென ரஜினி புத்தாண்டு வாழ்த்து கூற பயன்படுத்தி உள்ளது, பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி மறைமுகமாக யாரை நல்லவர் என்கிறார்; யாரை கெட்டவர் என்கிறார் என்ற கேள்வி, அரசியல் கட்சியினரிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினி வெளிநாடு செல்கிறார். வழக்கமாக, அவர் அரசியல் ரீதியாக, ஒரு கருத்தை தெரிவித்தால், வெளிநாடு அல்லது இமயமலைக்கு சென்று, சில நாட்கள் அமைதி காத்து விட்டு சென்னை திரும்புவார். கடந்த ஆண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ரஜினி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது, ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற வசனத்தை பதிவு செய்தார். ‘நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான்’ எனக் கூறிய நிலையில், இன்று படப்பிடிப்புக்காக, ஹாங்காங் புறப்பட்டு செல்கிறார்.
இங்கு கப்பலில் கோல்ட் கடத்தல் சம்பவத்தையும், அதன் பின்னணியில் நடக்கும் காட்சிகளையும் அங்கே எடுக்க இருக்கிறார்கள். இதற்கு முன்பு லிங்கா படத்திற்காக அங்கு சென்றிருக்கிறார் ரஜினி. மக்காவ் என்ற இடத்தில் நடந்த பாடல் காட்சியை படம் பிடித்தார்கள். அதற்கு பிறகு இப்போதுதான் ரஜினி அங்கு செல்கிறார்.
கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, ரெபே மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அமீர் கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.