No menu items!

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்​களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்​களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில் பூமிக்கு திரும்​பி​னார். அவர் தரையைத் தொட்​ட​போது இந்​தியா திரு​விழா கோலம் பூண்​டது. அனைத்து இந்​தி​யர்​களும் வெற்றி கொண்​டாடத்​தில் திளைத்​தனர். ஒட்​டுமொத்த தேச​மும் பெரு​மிதத்​தில் பொங்​கியது.

கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்​திர​யான் – 3 வெற்​றிகர​மாக நில​வில் தரை​யிறங்​கிய​போதும் இதே சூழல் காணப்​பட்​டது. அறி​வியல், விண்​வெளி ஆராய்ச்சி குறித்து இந்​திய சிறார் மனதில் ஆர்​வம் துளிர்த்​திருக்​கிறது. பள்ளி மாணவர்​களிடையே அறி​வியல் ஆர்​வத்தை தூண்ட இன்​ஸ்​பயர்​-​மானக் என்ற திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

இந்த திட்​டத்​தில் இது​வரை லட்​சக்​கணக்​கான மாணவ, மாண​வியர் இணைந்​துள்​ளனர். நாடு முழு​ வதும் விண்​வெளி துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்​வெளி தினத்தை அனை​வரும் கொண்​டாட வேண்​டு​கிறேன்.

உலகத் தரத்​தில் இந்​தி​யா​வில் பொருட்​களை தயாரிக்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். இந்​தி​யர்​களின் வியர்​வைக்கு மதிப்​பளிக்க வேண்​டும். இந்​திய கலாச்​சா​ரத்​தின் மிகப்​பெரிய ஆதா​ரம் நமது பண்​டிகைகளும், நமது பாரம்​பரி​யங்​களும்​தான்.

பல நூற்​றாண்​டு​களாக ஓலைச்​சுவடிகளில் பாது​காக்​கப்​பட்​டிருக்​கும் ஞானம் நமது மிகப்​பெரிய சொத்​தாகும். இந்த ஓலைச்​சுவடிகளில் விஞ்​ஞானம் உள்​ளது, சிகிச்சை முறை​கள் உள்​ளன. இசை, தத்​து​வம் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் நிறைந்திருக்கின்றன.

பாரம்​பரிய ஞானத்தை போற்றி பாது​காப்​பது நமது பொறுப்​பாகும். தமிழ்​நாட்​டின் தஞ்​சாவூரை சேர்ந்த மணி. மாறன் இந்த பணியில் ஈடு​பட்​டிருக்​கிறார். தமிழில் இருக்​கும் ஓலைச்​சுவடிகளை இளம்​தலை​முறை​யினர் படித்து கற்​றுக் கொள்​ள​வில்லை என்​றால் விலைம​திப்​பில்​லாத மரபுச் செல்​வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கரு​தி​னார். இதற்​காக அவர் மாலைநேர வகுப்​பு​களை தொடங்​கி​னார்.

தமிழ்ச் சுவடிகளை எவ்​வாறு படிப்​பது, புரிந்து கொள்​வது என்பது குறித்து மணி. மாறன் கற்​பித்​தார். அவரது வழி​காட்​டு​தலால் ஏராள​மான மாணவர்​கள் ஓலைச்​சுவடிகளை கற்​கும் அறி​வில் தேர்ச்சி பெற்று உள்​ளனர். இப்​படிப்​பட்ட முயற்​சிகள் நாடு முழுவதும் நடை​பெற்​றால் நமது பண்​டைய ஞானம் நான்கு சுவர்​களுக்​குள் முடங்கி கிடக்​காமல், புதிய தலை​முறை​யினரை சென்றடை​யும்.

இந்த சிந்​தனை​யால் உத்​வேகம் அடைந்து நடப்​பாண்டு மத்​திய பட்​ஜெட்​டில் ‘ஞான பாரத இயக்​கம்’ என்ற திட்​டம் அறிவிக்கப்பட்டது. புதிய இயக்​கத்​தின்​படி, பண்​டைய சுவடிகள் டிஜிட்​டல்​மய​மாக்​கப்​படும். ஒரு தேசிய டிஜிட்​டல் சேமிப்​பகம் உரு​வாக்​கப்​படும். இதன்​மூலம் உலகம் முழு​வதும் உள்ள மாணவர்​கள், ஆய்​வாளர்​கள்​ இந்​தி​யா​வின்​ ஞான பாரம்​பரி​யத்​தோடு தங்​களை இணைத்​துக்​ கொள்​ள முடி​யும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

இந்தியாவின் ஆன்மா செஞ்சி கோட்டை: மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் 12 கோட்டை களை, உலக மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீரித்து உள்ளது. இவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், செஞ்சி கோட்டை தமிழ்நாட்டிலும் உள்ளது.

இந்த கோட்டைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல. இவை இந்தியாவின் ஆன்மா ஆகும். இதேபோன்று நாடு முழுவதும் பல்வேறு கோட்டைகள் உள்ளன. இவை நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். இந்தக் கோட்டைகளுக்கு பயணம் செய்து அவற்றின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...