No menu items!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தீ​பாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்​றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்​டுமே பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தீபாவளி பட்​டாசுகளை வெடிப்​ப​தால் நம்மை சுற்​றி​யுள்ள நிலம், நீர், காற்று உள்​ளிட்​டவை பெரு​மள​வில் மாசுபடு​கின்​றன. பட்​டாசு வெடிப்​ப​தால் எழும் அதி​கப்​படி​யான ஒலி மற்​றும் காற்று மாசி​னால் சிறுகுழந்​தைகள், வயதான பெரியோர்​கள் மற்​றும் நோய்​வாய்​பட்​டுள்ள வயோ​தி​கர்​கள் உடல் அளவிலும், மனதள​விலும் பெரும் பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள்.

உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில், தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்​டிலிருந்து தீபாவளி பண்​டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை​யும், இரவு 7 முதல் 8 மணி வரை​யில் மட்​டுமே ஒலி எழுப்​பும் பட்​டாசுகளை வெடிப்​ப​தற்கு நேரம் நிர்​ண​யம் செய்​துள்​ளது. அந்த வகை​யில், இந்த ஆண்​டும் தீபாவளி பண்​டிகையன்​று, காலை 6 முதல் 7 மணி வரை​யிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்​டுமே பட்​டாசுகளை வெடிக்​கவேண்​டும்.

குறைந்த ஒலி​யுட​னும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்​தும் தன்​மை​யும் கொண்ட பசுமை பட்​டாசுகளை மட்​டுமே வெடிக்க வேண்​டும். மாவட்ட நிர்​வாகம், உள்​ளாட்சி அமைப்​பு​களின் முன் அனு​ம​தி​யுடன், பொது​மக்​கள் திறந்த வெளி​யில் ஒன்று கூடி கூட்​டாக பட்​டாசுகளை வெடிப்​ப​தற்கு அந்​தந்த பகு​தி​களில் உள்ள நலச்​சங்​கங்​கள் மூலம் முயற்​சிக்க வேண்​டும். அதிக ஒலி எழுப்​பும் மற்​றும் தொடர்ச்​சி​யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்​டும்.

மருத்​து​வ​மனை​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் அமைதி காக்​கப்​படும் இடங்​களில் பட்​டாசுகள் வெடிக்​கக் கூடாது. குடிசை பகு​தி​கள் மற்​றும்எளி​தில் தீப்​பற்​றக் கூடிய இடங்​களுக்கு அரு​கில் பட்​டாசு வெடிப்​பதை தவிர்க்க வேண்​டும். எனவே, பொது​மக்​கள் சுற்​றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்​படுத்​தாத பட்​டாசுகளை அரசு அனு​ம​தித்​துள்ள நேரத்​தில் உரிய இடங்​களில் கூட்​டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளி​யாக கொண்​டாடு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...