ஒரு துப்பாக்கி பல பேர் மரணத்திற்குக் காரணமாகிறது. சில ஆண்டுகளுக்கு சென்னை ராணுவ அதிகாரி மாங்காய் பறிக்க வந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடிபடையாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்தத் துப்பாக்கியை அவர் கூவத்தில் தூக்கி எரிந்து விடுகிறார். அது துப்பரவு பணியாளரான அபிராமி கையில் கிடைத்து விடுகிறது. அது அவரை நம்பி இருக்கும் ஒரு திருநங்கையின் உயிரை காக்கப் பயன்படுகிறது.
அதே துப்பாக்கி பரத் கையில் கிடைத்து அது ஒரு சமூக ஆர்வலரை பழி வாங்குகிறது. இப்படி கௌரவக்கொலை,, தாதாக்கள் கொலை என்று பல இடங்களில் உயிரைக் குடிக்கிறது துப்பாக்கி கடைசியில் என்ன ஆகிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகன்.
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார். கடைசியில் அவரது நிலை பரிதாபத்தை வரழைக்கிறது.
அஞ்சலி நாயர் படத்தில் முக்கிய பங்காக இருக்கிறார். அவரது எதிர்பார்ப்பும், ஏமாற்றம் அடையும் சூழலும் அவரை துப்பாக்கி ஏந்த வைக்கிறது.
அபிராமி வரும் காட்சிகள் சென்னை தூய்மைப்பணையாளர்களின் நிலையை கண்முன் கொண்டு வருகிறது. திருநங்கை மகனுக்காக கொந்தளிக்கும் காட்சியும். க்ளைமேக்ஸ் காட்சியும் மனதில் நிற்கும். இன்னும் சில கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றன.
ஆனால் படத்தின் எல்லா பாத்திரங்களும் நாடகத்தனமாக பேசுவதும், காட்சி நகர்வுகளும் மெதுவாக கடப்பதும் படத்தை சோர்வை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலப் படத்தின் கதைக்கரு அதை திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்றியிருந்தால் படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்களின் இசையாலும், கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவாலும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
கேபடன் ஆனந்த் தயாரித்திருக்கும் இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கியிருக்கிறார்.