நிர்மலா சீதாராமன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கரூரில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 39 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேரும் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 குழந்தைகளும் அடக்கம். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.