No menu items!

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் புடைவைகள்

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் புடைவைகள்


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது ஆண்டாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் 8 ஆண்டுகள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்ச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது வித்தியாசமான புடைவைகளை அணிந்து வருவது அவரது ஸ்டைல். அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிர்மலா சீதாராமன் எந்த வகை சேலையை அணிந்து வருகிறார் என்று பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது.

2019-ம் ஆண்டில் முதல் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்தபோது தங்க பார்டர்களைக் கொண்ட இளஞ்சிவப்பு மங்கல்கிரி பட்டுப் புடவையை நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார். 2020 பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

இதேபோல 2021-ம் ஆண்டில் போச்சம்பள்ளி பட்டுப் புடவை, 2022- ம் ஆண்டில் ஒடிசாவின் பொம்காய் சேலையை ஆகியவற்றை அணிந்து வந்தார்.

2023-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கசுதி எம்பிராய்டரி வகை புடைவையை அணிந்த அவர், 2024-ம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் பிரபலமான கைவினைப் பொருளான காந்தா எம்பிராய்டரியுடன் கூடிய நீல நிற டஸ்ஸார் பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன், பிஹாரில் வடிவமைக்கப்பட்ட மதுபானி வகையிலான வெள்ளை நிற கைத்தறிப் பட்டுப்புடவை அணிந்து வந்துள்ளார். அதன் பார்டர் தங்க நிறத்தில் அமைந்துள்ளது. அதில் மீனை கருப்பொருளாக கொண்டு எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுபானி கலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சேலையை நிர்மலா சீதாராமன் உடுத்தி இருக்கிறார்

இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் அணிந்துள்ள சேலையை வடிவமைத்தவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த துலாரி தேவி. இவர் கடந்த 2021-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மிதிலா என்ற கலையைக் காப்பதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த துலாரி தேவி கைகளால் வரைந்து வடிவமைக்கப்பட்ட மதுபானி வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சேலையை கொடுத்துள்ளார். மதுபானி கலை பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலையை அணிவதை வழக்கமாக கொண்ட நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பிஹாரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்த சேலையை அணிந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...