சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்திஅம்மன்2’ படத்தின் பூஜை, சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இன்று காலை நடந்தது. கோயில் மாதிரி செட் அமைக்கப்பட்டு படத்தின் முதற்காட்சி படமாக்கப்பட்டது.
படத்தொடக்கவிழாவில் சுந்தர்.சி பேசியது:
‘‘முதலில் சின்ன படமாக மூக்குத்திஅம்மன்2வை எடுக்கலாமா என யோசித்தோம். ஆனால், தயாரிப்பாளர் ஐசரி. கே.கணேசின் முயற்சியால் இப்போது இந்தியாவில் உள்ள முக்கியமான படமாக மூக்குத்திஅம்மன்2 உருவாகிறது. படத்தின் பூஜையே சிறப்பாக நடக்கிறது. படத்தின் பட்ஜெட் குறித்து நான் முதலில் தயங்கி பேசினேன். ஆனால், நான் சொன்னதை விட 2 மடங்கு பட்ஜெட்டில் இந்த படத்தை அவர் தயாரிக்கிறார். நாங்கள் நினைத்த அனைத்து நடிகர்களும் கிடைத்தார்கள்.
முதலில் அவர் நடிப்பாரா என யோசித்தேன். ஆனால், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என முதலில் படத்திற்குள் வந்தவர் ரெஜினா. கன்னடத்தில் முன்னணி ஹீரோ, இயக்குனரான துனியா விஜய். அங்கே பிரபல ஆக் ஷன் ஹீரோவும் கூட. அவர் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அவரை தமிழ்சினிமா சார்பில் வரவேற்கிறோம். சமீபத்தில் என் படங்களில் தொடர்ச்சியாக இருக்கிற யோகிபாபு இந்த படத்திலும் இருக்கிறார். கருடா ராமுக்கும் முக்கியமான வேடம். நாடோடிகள் அபிநயாவும், சுவாமிநாதனும் படத்தில் இருக்கிறார். இனியாவுக்கும் நல்ல வேடம். இவர்களை தவிர, அஜய்கோஷ்,மைனா நந்தினி என ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். இன்னும் பலரும் நடிக்கப்போகிறார்கள்.
என் உதவியாளராக இருந்தவர் சிங்கம்புலி. இப்போது காமெடி, குணசித்திர நடிகர் ஆகிவிட்டார். அவரும் இந்த படத்தில் நடிக்கிறார். மூக்குத்திஅம்மன்2 படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். ’’ என்றார்
பட விழாவில் பேசிய ஐசரி கே கணேஷ், ‘5 ஆண்டுகளுக்குமுன்பு, எங்கள் பேனரில் ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை எடுத்தார். அப்போது அம்மனாக நடிக்க பலரின் சாய்ஸ் ஆக நயன்தாரா இருந்தார். அந்த படம் பெரிய ஹிட். 2வது பாகத்தை யாரை வைத்து எடுக்கலாம் என நாங்கள் டிஸ்கசன் செய்தபோது பலரும் சுந்தர்.சி என்றார்கள். அவர் எடுத்த அம்மன் கதைகள் வெற்றி. என்னிடம் 3 நேரம் இந்த கதை சொன்னார். நான் மிரண்டுவிட்டேன். த்ரி டிஜிட்டல் பட்ஜெட்டில் இந்த படத்தை தொடங்குகிறோம்.