No menu items!

ரஹ்மானுக்கு தேசிய விருது! – விருதுகள் முழு பட்டியல்!

ரஹ்மானுக்கு தேசிய விருது! – விருதுகள் முழு பட்டியல்!

பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 தேசிய விருதுகள்

ஓவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி 70 வது தேசிய விருதுகள் அறிவிப்பு இன்று வெளியானது. பலரும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் தேசிய விருது பெற்றதா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

தமிழின் சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு என 4 பிரிவுகளில் தேசிய விருது

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிப்புபொன்னியின் செல்வன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிப்புசிறந்த சவுண்ட் டிசைனர் விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிப்புசிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவிவர்மனுக்கு அறிவிப்பு. மேலும் விருதுகள் கிடைத்த படைப்புகளை பார்க்கலாம். றந்த ம

அதன்படி, பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது. தேசிய விருதுகளில் எத்தனை தெலுங்கு படங்கள் இடம்பெறும் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த தருணத்தில் பான் இந்தியா அளவில் வசூல் சாதனை படைத்த கார்த்திகேயா 2 படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிராந்திய மொழிப் படங்கள் பிரிவில் சிறந்த தெலுங்கு படமாக கார்த்திகேயா 2 விருது வென்றுள்ளது. சந்து மொண்டேடி இயக்கத்தில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் ஜோடி நடித்த இப்படம் 2022 இல் வெளியாகி பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆந்தம் (மலையாளம்) சிறந்த இயக்குனர்: சூரஜ் ஆர் பர்ஜத்யா (உன்சாய்)(ஹிந்தி) சிறந்த அறிமுக இயக்குனர் : பிரமோத் குமார் (பவுஜா சிறந்த நடிகர் : ரிஷப் ஷெட்டி (காந்தாரா-கன்னடம்)சிறந்த நடிகை : நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்-தமிழ்)- மனசி பரேக் (குச்சி எக்ஸ்பிரஸ்-குஜராத்தி) சிறந்த மக்கள் விரும்பிய படம் : காந்தாரா (கன்னடம்) சிறந்த தேசிய, சமூக சுற்றுச்சூழல் மதிப்பை மேம்படுத்துதல் : குச்சி எக்ஸ்பிரஸ் (குஜராத்தி) சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் : பிரம்மாஸ்திரா (ஹிந்தி)-ஜெயகர் அருத்ரா, நீலேஷ்(வைரல் தக்கர் சிறந்த துணை நடிகை : நீனா குப்தா (உன்சாய்-ஹிந்தி) சிறந்த துணை நடிகர் : பவன் ராஜ் மல்ஹோத்ரா (பவுஜி-ஹரியானவி) சிறந்த குழந்தை நட்சத்திரம் : ஸ்ரீபத் (மணிகண்டன்-மலையாளம்) சிறந்த பாடகர் : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா-கேசரியா-ஹிந்தி) சிறந்த பாடகி : பம்பாய் ஜெயஸ்ரீ (சௌதி வெள்ளக்கா-சௌதி பேபி கொக்கனட்- மலையாளம்) சிறந்த ஒளிப்பதிவு : ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் -தமிழ சிறந்த திரைக்கதை (அசல்) : ஆந்தம் (ஆனந்த் எகர்ஷி) சிறந்த வசனகர்த்தா : அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சித்தேலா (குல்மோகர்) சிறந்த ஒலி வடிவமைப்பு : ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பிஎஸ்1-தமிழ்) சிறந்த படத்தொகுப்பு : ஆந்தம் (மகேஷ் புவனேந்த்) சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) : பிரீதம் (பிரம்மாஸ்திரா-ஹிந்தி) சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஏ.ஆர். ரஹ்மான் (பிஎஸ் 1-தமிழ்) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : ஆனந்த் அதியா (அபராஜிதோ) சிறந்த சண்டை பயிற்சி: அன்பு, அரிவு (KGF அத்தியாயம் 2)சிறந்த ஒப்பனையாளர் : சோம்நாத் குந்து (அபராஜிதோ ) சிறந்த ஆடை வடிவமைப்பு : நிக்கி ஜோஷி (கட்ச் எக்ஸ்பிரஸ்) சிறந்த பாடல் வரிகள்: பவுஜா (‘சலாமி’க்கு நௌஷாத் சதர் கான்) சிறந்த நடன இயக்குனர்: ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்- ‘மேகம் கருக்கதை’) சிறப்பு ஜூரி விருதுகள்: மனோஜ் பாஜ்பாய் (குல்மோகர்), சஞ்சய் சவுத்ரி(காதிகன்)

தமிழில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சில படங்களுக்கு விருது கிடைக்காமல் போனது ஏமாற்றமாக இருக்கலாம். இந்த ஆண்டு மக்கள் விரும்பிய சிறந்த படம் என்று கே.ஜி.எஃப் 2 படத்தை சேர்த்திருக்கிறார்கள். மக்களின் அமோக ஆதரவி பெற்ற ஒரு படத்திற்கு விருது கொடுக்காமல் விடுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்கிற மன நிலையை உருவாக்கியிருப்பது நல்ல விஷயமாக எடுத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...