சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்குப் போயிருந்தபோது அவருக்கு லேசான மயக்கம் வந்து தடுமாறியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு சோடியம் குறைபாடு காரணமாக உடல் நிலை மாற்றம் ஏற்பட்டது கண்டுபிடிக்க்லப்பட்டது.
அவரை உடனே குடும்பத்தினர் சந்தித்து பார்த்துக்க்கொண்டார்கள். வெங்கட்பிரபு கோயமுத்தூரில் இருக்கும் உயர்தர மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிக்கிச்சைக் கொடுத்தார்கள். தகவலைக் கேள்வி பட்டு பாரதிராஜா உடனே கோயமுத்தூருக்கு சென்று அமர் அவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரைப் பார்த்த பாரதிராஜா கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். காரணம் அந்த செட்ல அமர அவர்கள் தான் ஜுனியர்.
சின்னபயல் உனக்கு இந்த நிலையா என்று அழுதிருக்கிறார். பாரதிராஜா. அப்போதிருந்து அமர் அவர்களுக்கு உடலில் சில மாற்றங்கள் வருவது இயல்பாக இருந்திருக்கிறது. அது சீரியஸ் அள்வுக்குப் போகவில்லை.
சில நாட்களுக்கு முன்னாள் மானாமதுரை பக்கத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்திருந்தார். அப்போது அவருக்கு மயக்கம் போல வந்திருக்கிறது. உடனே அவரை அங்குள்ளவர்கள் சேர்ந்து மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள்.
அவருக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்த விக்கல் சில நாட்கள் நீடித்திருக்கிறது என்பதுதான் இதில் உள்ள வித்தியாசமான விஷயம். நமக்கு வரும் விக்கல் தண்ணீர் குடித்தால் போய் விடும். ஆனால் சிலருக்கு 2 நாட்கள் வரை நீடிக்கும் படியாக இருக்கும்.
இது அவர்கள் குடும்பத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. இதற்கு முன்னால் இளையராஜா அவர்களுக்கும் இதுபோல விக்கல் வந்து நீடித்திருந்தது. அப்போதும் ஓய்வு எடுக்காமல் ராஜா சார் தொடர்ந்துரெக்கார்டிங்கை வைத்திருந்தார்,. அப்படியான சூழலில் டியூனை சுந்தர்ராஜன் என்பவர் இருந்தார் அவரிடம் சொல்லி பாடலை விளக்கியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ராஜா சார் பிரசா ஸ்டுடியோவில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இதே போல விக்கல் தொடர்ந்து வந்தது. அப்போது உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இதே ஜனவரி 6 ம் தேதி சினேகன் எடுக்க இருந்த ராஜராஜனின் போர்வாள் படத்தின் பாடலை கம்போஸ் செய்தார்.
அமர் அவர்களுக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் வந்து இப்போது தெளிவக இருக்கிறார். விரைவில் நம்மிடம் பேசுவதாக சொல்லியிருக்கிறார்.
விஷாலுக்கு இதே போல உடல் நலப்பிரசனை இருப்பதாக தெரிகிறது.
அவருக்கு அவன் இவன் படத்தில் நடித்ததிலிருந்தே நரப்பு பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு கண் விழியை இழுத்து வைத்து தைத்த்து விட்டார் பாலா. இது அப்போதைக்கு படப்பிடிப்பு நடத்த உதவியாக இருந்ததே தவிர படம் முடிந்தபிறகு விஷாலுக்கு கடுமையான நரம்பியல் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. கண்களில் கடுமையான வலியும், கண்ணீர் வழிவதுமாக இருந்திருக்கிறது. அதோடு அவ்வப்போது ஓற்றை தலைவலி வந்து கடுமையாக தாக்கியிருக்கிறது. வலி என்றால் உயிர் போகும் வலியாக இருக்குமாம்.
இதை சமாளிக்க அவருக்கு பீர் குடிக்கும் பழக்கம் ஆரம்பித்து அது எங்கெங்கோ போய் முடிந்திருக்கிறது.
அதோடு அந்தப்படத்தில் பெரிய லாபம் கிடைத்து தயாரிப்பாளரும் மகிழ்ச்சியாக இல்லை. படத்தில் நடித்த ஆர்யா, விஷால் இருவரும் மகிழ்ச்சியாக இல்லை. அது பெரிய வினையாத்தான் வந்து முடிந்திருக்கிறது. அதோடு ஸ்ரீ ரெட்டியின் சகவாசத்தால் ஏற்பட்ட பழக்கத்தை இன்னும் விஷால் மறக்க வில்லை என்கிறார்கள். இப்போது அவருடன் தொடர்பில்லை என்றாலும் அவரால் கிடைத்த நட்பால பல இரவுகள் தூங்காமல் இருக்கிறாராம் விஷால் இது தெரிந்துதான் அவருக்கு நிச்சயம் செய்யபப்ட்ட மணப்பெண் அனிஷாவுக்கு தெரிந்து விலகியிருக்கிறார்.