விஷால் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். அவரது நண்பர்களான சடகோபன் ரமேஷ், சந்தானம், நிதின் சத்யா ஆகியோரை ஒரு திருமணத்தில் சந்திக்கிறார். அவர்கள் ஓவ்வொருவரும் தனியார் தொலைக்காட்சி அதிபரான சோனு சூட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு சோனு சூட்டை எதிர்த்து போராடுகிறார். இதனால் அவருக்கு பல சிக்கல் வருகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார். நண்பர்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதை கலாட்டா காமெடிக்கு நடுவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டிருந்தாலும் கதை எந்த காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கும் கதையாக நகைச்சுவை இருப்பதால் படம் இப்போதும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சந்தானத்தின் அதிரடி காமெடியால் தியேட்டரே அலறுகிறது. விஷால் காமெடி கலந்த அதிரடியாக நடித்திருக்கிறார். அஞ்சலி, வரலட்சுமி இரண்டு ஹீரோயின்கள் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் அஞ்சலியும், இரண்டாம் பாதியில் வரலட்சுமியும் ஏகத்துக்கும் கவர்ச்சியால் காப்பாற்றியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கமெண்டுகளில் நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ் சினிமா ஹீரோவாக்கி விட்டது. கவலையாக இருக்கிறது.
மணிவண்ணன், மனோபாலா சோனு சூட் ஆகியோர் படத்திற்கு பலமாக இருக்கிறார்கள். மனோபாலா படத்திலும் இறந்து போய் தியேட்டரை காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒரு கமர்சியல் கதைக்கான எல்லா அம்சங்களுடன் படம் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறார் இயக்குனர் சுந்தர். சி இந்த படத்தின் பாடல்களுள் ஒன்று எனக்கூறலாம். அதுதான், மை டியர் லவ்வரு பாடல். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகியிருந்த இந்த பாடல், கிட்டத்தட்ட 12 வருடத்திற்கும் மேலாக பலரது ப்ளேலிஸ்டில் வைப் செய்யும் பாடலாக இருக்கிறது. விஷால் இந்த பாடலை பாடியிருக்கிறார். படத்தின் ஜாலியான மூடில் ரொம்பவே ரசிக்க முடிகிறது. படத்தில் நடித்த பல கலைஞர்கள் நம்மோடு இப்போது இல்லை என்பது வருத்தம்தான்.