குமுரி மாவட்டத்தின் பாதிரியார் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவர் செய்த பாவ காரியங்கள் ஒவ்வொன்றாய் வெளியில் வந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த பாவ காரியங்களுக்கு அடிப்படையாக அவருக்கு ஏற்பட்ட காதல் காரணமாக இருந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.
குமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்ட்ரோ. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி இருக்கிறார். இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சூட்டைக் கிளப்பியது.
பாதிரியார் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. ஓடி ஒளிந்திருந்த பாதிரியார் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறை விசாரணையில் அவர் கூறிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.
பெனடிக்ட்டுக்கு ஆன்மிகப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் கிறிஸ்துவர்களுக்கான ஒரு இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார். அந்தப் படிப்பை முடித்தால்தான் பாதிரியாராக பணியாற்ற முடியும்.
அவர் படித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு காதல் வந்திருக்கிறது. அவரது குடும்ப நண்பர் வீட்டுப் பெண்ணிடம் காதல் வயப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கும் விருப்பம்தான். இவர்கள் காதல் வளர்ந்திருக்கிறது.
ஆனால் அதில் ஒரு சிக்கல். கத்தலிக்க கிறிஸ்துவ மரபுபடி பாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது, குடும்ப உறவுகளுடன் இருக்கக் கூடாது. அதனால் இறையியல் படிப்பிலிருந்து விலகி காதல், திருமணம் என்று வாழ விரும்பியிருக்கிறார். ஆனால் அதை வெளியில் உடனே சொல்லவில்லை. படிப்பும் முடிந்திருக்கிறது. பாதிரியார் பட்டமும் பெற்றிருக்கிறார். காதலையும் விட முடியவில்லை. இது வீட்டுக்கு தெரிந்ததும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பாதிரியார் பணியை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்புவது சரியில்லை என்று குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து காதலைக் கைவிட்டுவிட்டார். காதலர்கள் கூடிப் பேசி பிரிவது என்று முடிவு எடுத்ததாக காவல்துறையினரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு கடந்த வருடம் திருமணமாகியிருக்கிறது. அதற்குக் முன் அந்தப் பெண்ணுடம் பலவிதமாக படங்களை எடுத்திருக்கிறார். அவையெல்லாம் பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கின்றன.
திருமணத்துக்குப் பின் அந்தப் பெண்ணுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இப்போது பாதிரியார் கூறுகிறார். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. பாதிரியார் மனதிலிருந்து காதல் பெண் போனாளே தவிர மனதுக்குள் காதலும் காமமும் தொடர்ந்து இருந்திருக்கிறது.
அதனால் தான் பணி செய்யும் ஆலயங்களில் பெண்களிடம் எளிதாக பழகி அவர்களைத் தன்னுடைய வழிக்கு கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அவரது வலையில் சிக்கிய பெண்களை சீரழிக்க முயற்சித்தார் என்பதுதான் பாதிரியார் மீது இருக்கும் புகார்.
நானாக எந்தப் பெண்ணையும் அழைக்கவில்லை. அதே போல் அவர்களிடம் வலுக்கட்டாயமாக எந்த செயலையும் செய்யவில்லை. அவர்கள் விரும்பிதான் என்னுடன் பழகினார்கள் என்று பாதிரியார் விசாரணையில் தெரிவித்திருக்கிறாராம்.
இந்த வழக்கில் பாதிரியார் மீது வழக்குப் பதியப்பட்டாலும் சம்பந்தப்பட்டப் பெண்கள் வெளிப்படையாக வந்து வழக்கு விசாரணைக்கு உதவுவார்களா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
வலுவான ஆதாரங்களையும் சாட்சிகளையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பாவ பாதிரியார் தண்டிக்கப்படுவாரா? தப்பிவிடுவாரா?