No menu items!

அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்று தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு கட்சித் தொண்டர்களை அழைத்து அதன் தலைவரும் நடிகருமான விஜய் தொடர்ந்து கடிதங்களை எழுதி வருகிறார். இந்த சூழலில் இன்று இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெயரைப் போல சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் முந்தைய கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.

ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.
அப்படித்தான் வரவேண்டும்.

நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...