விஜயின் ’வாரிசு’ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை போரூரில் நடந்து வருகிறது. விஜய் – ராஷ்மிகா மந்தானா சம்பந்தப்பட்ட கலகலப்பான, கிளுகிளுப்பான காட்சிகளில் பாதி ஷூட் செய்யப்பட்டு விட்டன.
காரணம் ஆகஸ்ட்டில் புஷ்பா-2 படத்தின் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் அமெரிக்காவில் வந்த வேகத்தில், புஷ்பா 2 வேலைகளைத் தொடங்கிவிட்டார். ஷூட்டிங் தொடங்குவற்குள்ளாகவே அப்படம் பற்றி ஆளாளுக்கு கதையளக்க ஆரம்பித்து விட்டார்கள்.
புஷ்பா -2 படத்தில் ஸ்ரீவள்ளியான கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் கோபமாகும் புஷ்பா சீறிப்பாயும் புலியாக பழிவாங்குவதே கதை என்று யாரோ கொளுத்திப் போட்டு விட்டார்கள். இது ராஷ்மிகா மந்தானா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த கிசுகிசு பிஸினெஸ்ஸை பாதிக்குமோ என்று ஷாக்கான தயாரிப்பாளர் தரப்பு ’படத்தோட ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடியே இப்படி கிளப்பிவிடுறது எல்லாம் நியாயமே இல்லை. இது தப்பான தகவல். என்ன கதைன்னு கூட தெரியாம இப்படி கமெண்ட் அடிக்காதீங்க. ஆகஸ்ட்டில் ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.’ என உடனடியாக விளக்கம் அளித்திருக்கிறது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானா தனது சம்பளத்தை ஏற்றியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ROLEX வழியில் சல்மான் கான், ராம் சரண்
சமீபத்திய நாட்களாக திரைப்பட ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் ‘விக்ரம்’ படத்தில் ROLEX-ஆக சிறப்புத்தோற்றத்தில் சூர்யா எண்ட்ரீ கொடுத்தது தற்போது இந்திய சினிமாவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
விக்ரம் படத்தில் சூர்யா க்ளைமாக்ஸில் இரண்டே காட்சிகளில் வந்தாலும், விக்ரம்-3 படத்திற்கான ஆரம்ப புள்ளியாக அமைந்திருந்தன அந்த காட்சிகள். மேலும் இந்த காட்சி அடுத்த பாகத்திற்கான எதிர்பார்பை ரசிகர்களிடையே எகிற வைத்திருக்கிறது.
இதைக் கொண்டாடும் வகையில் கமலும், திடீர் சந்திப்பாக சூர்யா வீட்டிற்குப் போனார். தனது ராசியான ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்தார். இந்த செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலாகி பட்டையைக் கிளப்பியது.
ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவின் படத்தில் மற்றொரு கமர்ஷியல் ஹீரோ சிறப்புத்தோற்றத்தில் தோன்றினால் படத்திற்கான எதிர்பார்ப்பு. வரவேற்பு என கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பதை இதன்மூலம் தற்போது படம் இயக்கும் இயக்குநர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தாக்கத்தினால் சல்மான் கான் நடித்துவரும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தில் ராம் சரண் சிறப்புத்தோற்றத்தில் வந்து கலக்க இருக்கிறாராம். அதேபோல், மலையாளத்தில் மோகன்லால் நடித்து பரபரப்பை கிளப்பிய ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவுயுடன் சிறப்புத்தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறாராம்.
சல்மான் கான் படத்தில் மகன் ராம் சரண் நடிக்க, அப்பா சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் சல்மான் கான் நடிக்க இது ஒரு ‘Friends with benefits’ ஃபார்மூலாவில் ட்ரெண்டாகி வருகிறது.
பாகுபலி-2 வசூலை முறியடித்த 4 படங்கள்!
2017-க்குப் பிறகு இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் படம் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி-2’
இன்றைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துகொண்டிருக்கிறது.
தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி-2 அந்தந்த மாநில மொழி நேரடி திரைப்படங்களை விட வசூலில் சாதனை படைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சமீபத்தில் வெளிவந்த தென்னிந்தியப் படங்கள், பாக்ஸ் ஆபீஸில் நன்றாகவே கல்லா கட்டியிருப்பதால், பாகுபலி-2 வசூல் சாதனையை முறியடித்து இருக்கின்றன.
தமிழில் டப் செய்யப்பட்டாலும் ஏறக்குறைய 146 கோடி வசூல் செய்த பாகுபலி-2 சாதனையை 150 கோடி வசூலித்து கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் முறியடித்து இருக்கிறது.
மலையாளத்தில் பாகுபலி-2 படத்தின் 73 கோடி வசூலை, மோகன்லால் நடித்த ‘புலிமுருகன்’ படம் 79 கோடி வசூலித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
கன்னடத்தில் 129 கோடி வசூலித்த பாகுபலி-2 படத்தின் வசூலை, கேஜிஎஃப்-2 முறியடித்து இருக்கிறது. இப்படம் கர்நாடகாவில் 165 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக தெலுங்கில் எடுக்கப்பட்ட பாகுபலி-2 படத்தின் சாதனையை ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படம் ஓவர் டேக் செய்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து பாகுபலி-2 307 கோடி வசூலித்தது. இதையடுத்து வெளிவந்த ராஜமெளலியின் அடுத்தப்படமான ஆர்.ஆர்.ஆர். பாக்ஸ் ஆபீஸீல் 415 கோடி கல்லா கட்டியிருக்கிறது.