ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் படம் வெளியானது. டி.ஜே ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்திருந்தது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் 2 தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஷிவா ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படம் வசூலிலும் சாதனை படைத்தது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடி வசூல் செய்தது. இதனிடையே ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக நெல்சன் கூறியிருந்தார். அப்போது முதலே ஜெயிலர் 2 தொடர்பான அப்டேட் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயிலர் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி கூலி படத்தின் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அன்றைய தினமே ஜெயலர் 2 படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இதற்கு அனிருத்தான் காரணம் என்று தற்போது கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.