என்.வி.எஸ்-02 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி எஃப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC)-ன் ஒரு பகுதியான என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்த படி ஜி.எஸ்.எல்.வி எஃப் 15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளது. ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இது உள்நாட்டு கிரையோஜெனிக் கட்டத்துடன் ஜி.எஸ்.எல்.வி எப்-15-ன் எட்டாவது செயல்பாட்டு விண்கலம் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ்போர்ட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இது 100-வது ஏவுதல் ஆகும்.
NVS-02 என்பது இந்தியாவின் புதிய தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களில் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும், இது இந்திய விண்மீன் அமைப்பு (NavIC) அமைப்பின் ஒரு பகுதியாகும்.
ஜன.29-ல் ஜி.எஸ்.எல்.வி எஃப்- 15 ராக்கெட் ஏவுதல்: இஸ்ரோ அறிவிப்பு
என்.வி.எஸ்-02 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி எஃப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC)-ன் ஒரு பகுதியான என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்த படி ஜி.எஸ்.எல்.வி எஃப் 15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளது. ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இது உள்நாட்டு கிரையோஜெனிக் கட்டத்துடன் ஜி.எஸ்.எல்.வி எப்-15-ன் எட்டாவது செயல்பாட்டு விண்கலம் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ்போர்ட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இது 100-வது ஏவுதல் ஆகும்.
NVS-02 என்பது இந்தியாவின் புதிய தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களில் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும், இது இந்திய விண்மீன் அமைப்பு (NavIC) அமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த செயற்கைக்கோள் பழைய NavIC செயற்கைக் கோளான IRNSS-1E க்கு பதிலாக, சுற்றுப்பாதையில் 111.75°E இல் நிலைநிறுத்தப்படும்.