அமெரிக்க அரசியல்ல ட்ரம்ப் அதிரடிகளை காட்டிட்டு வந்தாலும், அவரையும் மீறி முன்னாள் அதிபரான பராக் ஒபாமா இப்ப லைம் லைட்டுக்கு வந்திருக்கார். பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் இடையில முன்ன மாதிரி உறவு இல்லை… அவங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கப் போறாங்கன்னு ஒரு செய்தி லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை விட வேகமா ஒரு வதந்தி பரவிட்டு இருக்கு.
அமெரிக்காவின் 44-வது அதிபரா 2009 முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகிச்சவர் பாரக் ஒபாமா. அவர் மனைவி மிச்செல் ஒபாமா. இந்த தம்பதிக்கு மலியா ஒபாமா, சாஷா ஒபாமான்னு 2 மகள்கள் இருக்காங்க. சந்தோஷமா சுத்திட்டு இருந்த அந்த ஜோடி இப்ப விவாகரத்து செய்யப் போறதா ஒரு வதந்தி சுத்திட்டு இருக்கு. பல பத்திரிகைகள் இதுபற்றி செய்திகளை வெளியிட்டு இருக்கு.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் சில நாட்களுக்கு முன்ன காலமானார். அவரது இறுதிச் சடங்குல பராக் ஒபாமா மட்டும்தான் கலந்துக்கிட்டார். அவரோட மிச்செல் ஒபாமா கலந்துக்கல. பொதுவா இதுபோன்ற நிகழ்ச்சிகள்ல, முன்னாள் அதிபர்களோட, அவங்க மனைவியும் கலந்துக்கறது வழக்கம். ஆனா மிச்செல் கலந்துக்காத்து பெரிய விஷயமா பார்க்கப்பட்டது. இதை புலனாய்வு செஞ்ச சில பத்திரிகைகள், அவங்க ரெண்டு பேரும் பிரியப் போறதா செய்தி வெளியிட்டுச்சு.
இந்த சூழலில் இன்னொரு செய்தியும் பரவத் தொடங்கிச்சு. பிரபல அமெரிக்க நடிகையான ஜெனிபர் அனிஸ்டனும் ஒபாமாவும் காதலிக்கறாங்கங்கிறதுதான் அந்த செய்தி. ஹாலிவுட் நடிப்பு உலகில் முன்னணி நபரான ஜெனிஃபர் அனிஸ்டன், இரண்டு முறை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்தாகி , தற்போது தனிமையில் இருக்கிறார். இந்த சூழல்ல ஒபாமாவும், அனிஸ்டனும் அடிக்கடி டேட்டிங் போறதா ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
ஆனால் ஜெனிபர் அனிஸ்டன் இதை மறுத்திருக்கார். “பராக் ஒபாமாவை ஒரு முறை மட்டும்தான் நான் சந்திச்சிருக்கேன். அவரைவிட மிட்செல் ஒபாமாவோட்த்தான் எனக்கு நெருக்கம்”ன்னு சொல்லி இந்த வதந்தியை அணைக்கப் பார்த்திருக்கார்.
மறுபக்கம் பராக் ஒபாமா, கடந்த வாரம் மனைவி மிட்செலுக்கு சமூக வலைதளத்துல வாழ்த்து தெரிவிச்சிருக்கார். மிட்செலோட தான் இருக்கற போட்டோவை பதிவிட்டு, “என் வாழ்க்கையின் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் ஒவ்வொரு அறையையும் அரவணைப்பு, ஞானம், நகைச்சுவை மற்றும் கருணையால் நிரப்புகிறீர்கள் . அதைச் செய்வதில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். வாழ்க்கையின் சாகசங்களை உங்களுடன் எடுத்துக்கொள்ள முடிந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உன்னை நேசிக்கிறேன்”ன்னு உருகி இருக்கார்.
அதற்கு பதிலளித்த மிச்செல் ஒபாமா, “உன்னை நேசிக்கிறேன், அன்பே!” என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த அமெரிக்க மக்கள் பிரச்சினை முடிஞ்சு போச்சுன்னு நினைச்சிருக்காங்க. ஆனா டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிட்செல் ஒபாமா பங்கேற்காதது அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தியை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் மனைவி இல்லாமல் வெளியில் அதிகம் செல்லாத ஒபாமா, இப்போதெல்லாம் அடிக்கடி தனியாகவே ரெஸ்டாரண்ட்களில் சுற்றித் திரிவதும் இந்த டைவர்ஸ் வதந்திக்கு கூடுதல் றெக்கையை கொடுத்திருக்கிறது.