No menu items!

ரோஹித் சர்மா விலகியும் இந்தியாவின் சொதப்பல் தொடர்கிறது

ரோஹித் சர்மா விலகியும் இந்தியாவின் சொதப்பல் தொடர்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், எதிர்பார்க்கப்பட்டதை போலவே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதில் கில் விளையாடினார். இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் சொதப்பியதால் 185 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று தொடங்கியது.

இந்த டெஸ்ட் தொடரின் ஆரம்பம் முதலே ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. முதல் போட்டியில் ஆடாத ரோஹித் சர்மா, அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தார். இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் 5 இன்னிங்ஸ்களை ஆடிய ரோஹித் சர்மா, மொத்தமாகவே 31 ரன்களைத்தான் எடுத்திருந்தார். இதனால் அவருக்கும், காம்பீருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா மோசமாக பேட்டிங் செய்வதால், அவருக்கு பதிலாக சுப்மான் கில்லை ஆடவைக்க பயிற்சியாளர் காம்பீர் விரும்பியுள்ளார். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை ஆடவைக்க வேண்டும் என்றும், இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இருந்து கவுரவமான முறையில் அவரை ஓய்வுபெறச் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் சிலர் காம்பீரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் அதை காம்பீர் ஏற்கவில்லை.

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே, உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆட வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அணியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் தீவிரமாக இருந்துள்ளார். இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றிருந்த தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க, 5-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இன்றைய போட்டிக்கு முன்னதாக டாஸ் போடச் சென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் பும்ராவிடம் ரோஹித் சர்மா பற்றி கேள்வி எழுப்ப்ப்பட்டது. அதற்கு பதிலளித்த பும்ரா, “எங்கள் கேப்டன் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஓய்வெடுப்பதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் எங்கள் கேப்டன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். இது அணியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது.

சுயநலம் இல்லை. அணியின் நலன் எதுவாக இருந்தாலும் அதைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இன்று அணியில் இரண்டு மாற்றங்கள். ரோஹித் ஓய்வு. அவருக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றார்.

ரோஹித் சர்மாவே இந்த முடிவை எடுத்ததாக இந்திய அணி வீரர்கள் வெளியில் சொன்னாலும், இது அவர் மீது திணிக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரின் பாதியிலேயே விலக்கி வைக்கப்பட்ட முதல் இந்திய கேப்டன் என்ற சோகமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை ரோஹித் சர்மா வெளியிடுவார் என்று முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ஆடுகளத்தில் இந்திய பேட்டிங்கின் சொதப்பல்கள் தொடர்ந்தன, டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சுப்மான் கில் 20 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். மாற்ற மூத்த வீரர்களான விராட் கோலி 17 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியில் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 40 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களை எடுத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...