வருமானத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வருமானத்தில் சமத்துவத்தையும் குறிக்கும் குறியீடான கினி (Gini) மதிப்பெண்கள், இந்தியாவுக்கு 25.5 என்ற நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 41.8 என்றும், சீனாவில் 35.7 என்றும் உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து நூறு வரையில் மதிப்பிடப்படும் கினியானது, 100 என்ற நிலையில் இருந்தால், அது தீவிர சமத்துவமின்மையைக் குறிக்கும். அதுமட்டுமின்று, ஜி7 மற்றும் ஜி20 நாடுகளைவிடவும் இந்தியா முன்னணியில் உள்ளது.
இருப்பினும், முதலிடத்தில் 24.1 சதவிகிதத்துடன் ஸ்லோவாக் குடியரசும், இரண்டாம் இடத்தில் 24.3 சதவிகிதத்தில் ஸ்லோவேனியாவும், மூன்றாம் இடத்தில் 24.4 சதவிகிதத்துடன் பெலாரஸும் உள்ளது. அதற்கு நான்காம் இடத்தில் 25.5 சதவிகிதத்துடன் இந்தியா உள்ளது.
2011 – 23 இடையில் 17.1 கோடி இந்தியர்கள், தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது. 2011-ல் 16.2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022-ல் 2.3 சதவிகிதமாகக் குறைந்தது.
2011-ல் 28.8-ஆக இருந்த இந்தியாவின் கினி, 2022-ல் 25.5 என்று உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் வருமான இடைவெளிகளைக் குறைப்பதைக் காட்டுகிறது.