No menu items!

இந்தியாவா? அமெரிக்காவின் H1B அணியா? – ஜெயிக்கப் போவது யாரு?

இந்தியாவா? அமெரிக்காவின் H1B அணியா? – ஜெயிக்கப் போவது யாரு?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்த்து இந்திய அணி ஆடுகிறது. பெயரளவில்தான் அது அமெரிக்க அணி. ஆனால் அந்த அணியில் உள்ள முக்கியமான 11 வீர்ர்களில் 5 பேர் இந்தியர்கள். அமெரிக்காவில் படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் சென்றவர்கள். அதனாலேயே அந்த அணி H1B அணி என்று அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. முதல் போட்டியில் கனடாவை வென்ற அமெரிக்க அணி, அடுத்த போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த சூழலில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியாவை அது எதிர்கொள்கிறது.

பழிவாங்கும் எண்ணத்தில் அமெரிக்க வீர்ர்கள்:

இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதில் இந்திய வீரர்களைவிட அமெரிக்க வீரர்கள்தான் அதிக முனைப்புடன் உள்ளனர். சிறுவயதில் சிறப்பாக ஆடினாலும், தேர்வுக்குழுவில் உள்ள சில அரசியலால் இந்திய அணிக்கோ அல்லது ஐபிஎல் அணிக்கோ தாங்கள் தேர்வாகாததே அந்த முனைப்புக்கு காரணம் இந்திய தேர்வுக்குழுவால் அவ்வாறு ஒதுக்கப்பட்ட மோனக் படேல், நிதிஷ் குமார், ஹர்மீத் சிங், ஜஸ்பீத் சிங், சவுரப் நெட்ரவால்கர் போன்ற வீர்ர்கள் இந்த அமெரிக்க அணியில் ஆடுகிறார்கள். எந்த இந்தியா தங்களை உதாசீனப்படுத்தியதோ, அந்த இந்திய அணியை வென்று பழிவாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் அதிகமாக உள்ளது. அதனால் அவர்களிடம் இருந்து இன்று கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான்:

பொதுவாக இந்திய அணி எந்த போட்டியில் ஆடினாலும், அந்த அணி தோற்க வேண்டும் என்றுதான் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இன்று அதற்கு நேர் எதிராக அமெரிக்காவை இந்தியா தோற்கடிக்க வேண்டுமே என்று வேண்டிக்கொள்ளும் மனநிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க அணி 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் ஜெயித்து 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்த 2 போட்டிகளிலும் அமெரிக்க அணி தோற்றால்தான் பாகிஸ்தானால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். அதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சினிடம் ஆலோசனை கேட்ட கோலி:

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி பெரிதாக சாதிக்கவில்லை. இரு ஆட்டங்களிலும் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார். இது இந்திய ரசிகர்களை கவலைகொள்ள வைத்துள்ளது. இந்த சூழலில் தனது பேட்டிங்கை மெருகேற்றும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார். இதற்காக உலகக் கோப்பை தொடரைக் காண அமெரிக்காவுக்கு சென்றுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் அவர் பேட்டிங் ஆலோசனைகளைப் பெற்றார். 14 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 12-ம் தேதிதான் இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியை விராட் கோலி ஆடினார். டி20 தொடரில் தனது 15-வது ஆண்டை இன்று தொடங்கும் விராட் கோலி, அதை அரை சதத்துடன் கொண்டாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஜடேஜாவுக்கு பதில் குல்தீப்?

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மற்றொரு ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல் நன்றாக ஆடியுள்ளார். இந்த சூழலில் இன்று நடக்கும் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவை ரோஹித் சர்மா ஆடவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு வலிமை சேர்க்கும். அதேபோல் துபேவுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை ஆடவைக்க வேண்டும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அப்படி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டால், அவர் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். விராட் கோலி 3-வது பேட்ஸ்மேனாக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...