புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன்” என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் யாரை விமர்சிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பெரியார் அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். எத்தனை படங்களில் நடித்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சிதான். அந்த படங்களில் நடித்தது மூலமாக எனக்கு ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கிறது. காசும் கிடைக்கிறது.
நான் நடித்த 250 படங்களில் 249 படங்கள் மகிழ்ச்சியானதுதான். இந்த படங்கள் ஓடியிருந்தாலும் சரி, ஓடாமல் இருந்தாலும் சரி. ஆனால் பெருமைக்குரிய ஒரே படம் தந்தை பெரியாராக நான் நடித்த படம்தான். அந்த படத்தில் நடித்ததற்காகவே பெரியார் 90 ஆண்டுகளாக கை விரலில் போட்டிருந்த மோதிரத்தை எனக்கு பரிசாக கொடுத்தார்கள்.
அவர் குறிதத் படத்தில் நடித்த போது பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. மையப்புள்ளி என்பது தந்தை பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர்தான். இதில் எந்த இயக்கம் என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
திராவிடர் விடுதலைக் கழகமாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் திராவிடக் கழகமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாக இருந்தாலும் சரி, இந்த கூட்டங்களுக்கு யார் அழைத்தாலும் நான் செல்வேன்.