நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையிலேயே முக்கியமான திரைப்படமாக தக் லைப் இருக்கும் என்கிறார்கள். அந்தளவுக்கு படம் உருவாகியிருக்கிறதாம். அதுவும் படத்தில் கமல்ஹாசனின் உடைகள் படத்தில் கலக்கலாக அமைந்திருக்கிறது என்கிறார்கள். இந்த நேரத்தில் இணையத்தில் பரவும் வீடியோ ஒன்ரு கமல்ஹாசனின் பழையவாழ்க்கையை விவரிக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி நடிகை சரிகா பேசியிருக்கிறார். இவர் திருமணத்திற்குப் பிறகு கமல் நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு உடை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்படி ஹேராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பிற்காக தேசிய விருதையும் பெற்றார் சரிகா.
அவர் அந்த வீடியோவில் கமலுடனான தனது வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார். அதில், நான் கமல்ஹாசனை விவாகரத்து செய்தது நல்ல முடிவாகவே நினைக்கிறேன். எனக்கும் என் அம்மாவுக்கும் எது நல்லது என்று நான் நினைத்தேனோ அதையே இப்போதும் செய்தேன். எங்கள் நலனுக்காக அப்போது அந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்தது. பல நாட்கள் யோசித்த பிறகே அந்த முடிவை நான் எடுத்தேன். ஒரே இரவில் அப்படியான முடிவுகளை எடுக்க முடியாது. அப்படி நான் முடிவு எடுத்த பிறகு ஒரு இரவில் என்னுடைய காரில் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என் கையில் வெறும் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. வேறு எந்த திட்டமும் இல்லை. என்னுடைய நண்பர்கள் வீட்டில் தங்கினேன். அங்கேயே குளித்தேன். என் காரில் தூங்கினேன் என்று சரிகா பேசியிருந்தார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
திடீரென்று இந்த வீடியோ எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை ரசிகர்கள் இதைப் பார்த்து விட்டு இன்றைய கமல்ஹாசனின் சூழலோடு ஒப்பிட்டு கருத்தை பதிவு செய்கிறார்கள்.
சரிகாவை விவாகரத்து செய்தது பற்றி அன்று கமலிடம் ஊடகத்தினர் பேசியதும் வெளியாகியிருக்கிறது. சரிகாவின் நிலையறிந்து அவருக்கு ஏன் உதவி செய்யவில்லை என்ற கேள்விக்கு, சரிகா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை. அவருக்கு நான் உதவி செய்வத அவர் அவமானமாக கருதுவார். அவர் வருத்தமடைந்திருப்பார். அன்று நான் எந்த உதவி செய்திருந்தாலும் அது அவரது நிலைமையை மோசமாக்கும். இந்த நிலையிலும் அனுதாபம் தேட நினைக்காதது நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கமல்ஹாசன் பேசியிருந்த கருத்துக்களையும் சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.