No menu items!

சூப்பர் ஸ்டாருக்கு இத்தனை வயசா!

சூப்பர் ஸ்டாருக்கு இத்தனை வயசா!

தளபதி ரீ ரிலீசில் கேக் வெட்டி கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 74வது வயதில் அடியெடுத்து வைக்க, இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. ஆம், நாளை மறுநாள் டிசம்பர் 12ம் தேதி தனது 74வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட உள்ளார்.

இப்போது லோகேஷ்கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதனால், பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் அப்டேட், சிறப்பு போஸ்டர் அல்லது டீசர் ஏதாவது ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்2வில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் அறிவிப்பும் பிறந்தநாளில் முறைப்படி அறிவிக்கப்பட வாய்ப்பு. இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், சென்னை ரோகிணி தியேட்டரில் தளபதி படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 11ம் தேதி இரவு, அதாவது நாளை இரவு 10மணிக்கு திரையிடப்படுகிறது. ஆட்டம், பாட்டம் என ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். சரியாக 12 மணி அளவில் படத்தை நிறுத்திவிட்டு தியேட்டருக்கு உள்ளே தங்கள் தலைவனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட உள்ளனர் ரசிகர்கள். டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் போயஸ்கார்டன் வீட்டுக்கு முன்பும் பிறந்தநாள் களை கட்ட உள்ளது

வழக்கம் போல, ரஜினிகாந்த் யாரையும் நேரில் சந்திக்கமாட்டார் என்று தெரிகிறது. அவர் சென்னையில் இருந்தாலும் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 74 வயதிலும் பெரிய சம்பளம், பெரிய மார்க்கெட், பெரிய ரசிகர் கூட்டம், இ்ந்த வயதிலும் ஹீரோவாக நடிப்பது என்பது இந்தியாவில் எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2

படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் படத்திலும் அதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மணிரத்னம் பட அறிவிப்பு இந்த பிறந்தநாளில் கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ரஜினி நடிக்கும் கூலி அவரின் 171வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...