No menu items!

400 கோடி​யில் கிண்டி நவீன பேருந்து முனை​யம்

400 கோடி​யில் கிண்டி நவீன பேருந்து முனை​யம்

கிண்டியில் நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

கிண்டி ஜிஎஸ்டி சாலையை ஒட்​டி​யுள்ள சுரங்​கப்​பாதை அரு​கில் பெரிய பேருந்து முனை​யம் அமைக்​கப்பட உள்ளது.

கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது.

சென்னை கடற்​கரை – தாம்​பரம் ரயில் தடத்​தி​லும், தாம்​பரம் – பிராட்வே பேருந்து வழித்​தடத்​தி​லும் கிண்டி முக்​கிய மைய​மாக உள்​ளது.

கிண்​டியை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் ஐடி நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், பயணி​கள் கூட்​டம் எப்​போதும் அதி​க​மாக இருக்​கும். தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இங்கு வந்து செல்​கின்​றனர். அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், கிண்டி ரயில் நிலை​யம் ரூ.13.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​படு​கிறது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: கிண்டி பகுதி பேருந்​து, ரயில், மெட்ரோ ரயில்​கள் இணை​யும் முக்​கிய சந்​திப்​பாக உரு​வெடுத்​துள்​ளது. எனவே, தற்​போதுள்ள கிண்டி பேருந்து நிலை​யத்தை பல்​நோக்கு ஒருங்கிணைந்த போக்​கு​வரத்து வளாக​மாகமாற்ற இருக்​கிறோம்.

நவீன வசதி​களு​டன் கூடிய பேருந்து நிலை​யம், வணிகவளாகம், வாகன நறுத்​து​மிடங்​கள், பேருந்​து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்​களை இணைக்​கும் பிரம்​மாண்ட நடைமேடை மேம்​பாலம், நகரும் படிக்​கட்​டு​கள், வெளிப்​புற நடை​பாதைகள், இணைப்பு வாகன வசதி நிறுத்​தும் இடம் ஆகியவை அமைக்​கப்பட உள்​ளன.

இதன் திட்ட மதிப்பு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி இருக்​கும். கிண்​டியை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து முனைய​மாக மாற்றினால், தற்​போது உள்​ளதைக் காட்​டிலும் கிளாம்​பாக்​கம், பிராட்​வே, கோயம்​பேடு, திரு​வான்​மியூர், அண்​ணாசதுக்​கம் உள்ளிட்ட இடங்​களுக்கு கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படும். அது​போல கிழக்கு கடற்​கரை வழி​யாக செல்​லும் வெளியூர் பேருந்துகளை அதி​கரிக்​கலாம்.

இதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்க தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​கான ஒப்பந்தப்புள்ளி வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நிறு​வனங்​களை தேர்வு செய்​து, அடுத்த 4 மாதங்​களில் அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​படும். இதன்​பிறகு, விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, அடுத்​தகட்ட திட்​டப்​பணி​களை மேற்​கொள்​வோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...