No menu items!

சென்னையில் ஃபார்முலா 1 பந்தயம் – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

சென்னையில் ஃபார்முலா 1 பந்தயம் – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.

கார் பந்தயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) மாலை இந்த கார் பந்தயம் தொடங்குகிறது. தெற்காசியாவில் நடக்கும் முதலாவது ஃபார்முலா 1 கார் பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் நீளமான சர்க்யூட்

 இந்த கார் பந்தயத்துக்காக  3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் பந்தயப் பாதை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்யூட்டில் சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய டிரைவர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. பார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐஆர்எல்) 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

எதையெல்லாம் கொண்டுசெல்லக் கூடாது?

போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை, மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும், அவை திருப்பி தரப்படாது..

தடை செய்யப்பட்ட பொருட்களின் விவரம்:

கூர்மையான பொருள்கள் – பிளேடுகள், கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை.

ஆயுதங்கள் – துப்பாக்கிகள், கத்திகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவை

லேசர்ஸ் – லேசர் லைட்டுகள்

விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் – வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர

ஒலி அமைப்புகள் – ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்.

தீப்பற்றக்கூடிய பொருட்கள் – தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம் போன்றவை.

போதைப்பொருள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் – போட்டி நிகழ்வில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

புகையிலை பொருட்கள்

அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள் – பிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை.

முகாம் உபகரணங்கள் – கூடாரங்கள், ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள் போன்றவை.

வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது

கண்டைனர் / தண்ணீர் பாட்டில்கள் / கண்ணாடி பாட்டில்கள் – மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள்.

டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம்.

புகைபிடிக்கும் சாதனங்கள்/பொருள்கள் – சீல் செய்யப்படாத சிகரெட்டுகள், லைட்டர்கள், மின்-சிகரெட் & வேப்ஸ் போன்றவை.

தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் – அனைத்தும் (ஊடகங்கள்/பத்திரிகை பணியாளர்களை தவிர).

தொழில்முறை கேமராக்கள் மற்றும் தொழில்முறை பதிவு உபகரணங்கள் – (புகைப்படம், வீடியோ, ஆடியோ) – தொழில்முறை ஜூம் லென்ஸ்கள், ஸ்டாண்டுகள், மோனோபாட்கள், ட்ரைபாட்கள், இணைப்பு குச்சிகள் (செல்பி ஸ்டிக்ஸ்) பிற வணிக உபகரணங்களுக்கு அனுமதி இல்லை.

தனியார் வாகனங்கள் – ஸ்கேட்போர்டுகள், ரோலர்பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.

தனிப்பட்ட பொருட்கள்/உபகரணங்கள் – கைப்பைகள், குடைகள், லேப்டாப், லேப்டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.

விற்பனையாளர் ஊர்திகள் எந்த வகையிலும் அனுமதி இல்லை.

வீசும் பொருட்கள் – தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள்

இழிவு அடையாளங்கள் அல்லது பதாகைகள் – ஜாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான / பாரபட்சமான மொழி.

மற்றவை – ஸ்ப்ரே பெயிண்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ், டோடெம்ஸ் போன்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...