பிராட் பிட் நடித்த எஃப் – 1 திரைப்படம், ஆப்பிள் ஒரிஜினல் ஃபிலிம்ஸின் மிகப்பெரிய வசூல் கொடுத்த கோடை கால படமாக மாறியுள்ளது.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் உருவான எஃப் – 1 திரைப்படம் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. பிராட் பிட் படங்களில் முதல் வாரத்தில் செய்த அதிகபட்ச வசூல் செய்த படமாக எஃப் -1 மாறியுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படங்களைத் தொடர்ந்து எஃப் – 1 திரைப்படத்தில் பிராட் பிட் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ஜோசப் கொசின்ஸ்கி இயக்கிய இப்படம், இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியானது.
இந்நிலையில், இப்படம் தென் அமெரிக்காவில் முதல் நாளில் 55.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த வார இறுதியுடன் உலகம் முழுவதும் 144 மில்லியன் வசூலித்துள்ளது.
இப்படத்தை தயாரித்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் ஒரிஜினல் ஃபிலிம்ஸ் வசூல் நிலவரத்தை அறிவித்துள்ளது. ஹாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கிய கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை இந்த நிறுவனம் கொடுத்துள்ளது.
2021-ல் ஆஸ்கர் வென்ற கோடா திரைப்படம் உள்பட ஃபிளை டூ தி மூன், நெப்போலியன் மற்றும் கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் உள்ளிட்ட படங்கள், திரையரங்குகளைக் காட்டிலும் ஆப்பிள் டிவி பிளஸ் தளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
200 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், அடுத்தடுத்த வாரங்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே கார் பந்தயங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள், திரையரங்க வசூலில் மிகப்பெரிய சாதனையை இதுவரை படைத்ததில்லை. 2013-ல் வெளியான ரஷ், 2023-ல் வெளியான ஃபெராரி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அவற்றின் சாதனைகளை வசூல் ரீதியாக முந்தியுள்ளது எஃப் – 1 திரைப்படம்.