No menu items!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – உமர் அப்துல்லா முதல்வராகிறார்!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – உமர் அப்துல்லா முதல்வராகிறார்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

பாஜக 62 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 50 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. பாஜக 28 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, கந்தர்பால், புட்காம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்பார் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில், தூக்கில் இடப்பட்ட தீவிரவாதியான அப்சல் குருவின் சகோதரர் அஜ்ஜாஸ் அகமத் குரு போட்டியிட்டார். அவர் நோட்டாவை விட குரைந்த அளவு வாக்குகளையே பெற்று தோல்வியைச் சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...