No menu items!

விசா இல்லாமல் 74 நாடுகளுக்கு சீனா அனுமதி

விசா இல்லாமல் 74 நாடுகளுக்கு சீனா அனுமதி

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளா்த்தியுள்ளது. விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா வரலாம் என்பதற்கான பட்டியலில் அந்த நாடு விரிவுபடுத்திள்ளது. அதன்படி, தற்போது 74 நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் 30 நாள்கள் வரை விசா இன்றி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.

தனது சுற்றுலாத் துறை, பொருளாதாரம், மென் வலிமையை (சாஃப்ட் பவா்) மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு படிப்படியாக விசா இல்லா நுழைவை விரிவுபடுத்தி வருகிறது.

தேசிய குடிவரவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் விசா இன்றி சீனாவுக்கு வந்தனா். இது, மொத்த பயணிகளில் மூன்றில் ஒரு பங்காகவும், முந்தைய ஆண்டை விட இரு மடங்காகவும் உள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லா நுழைவை சீனா அறிவித்தது. அதன் பின்னா் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இதில் சோ்க்கப்பட்டுள்ளன. ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் கடந்த மாதம் இதற்கு தகுதி பெற்றன. பின்னா் மத்திய கிழக்கு நாடுகளில் நான்கு நாடுகள் சோ்க்கப்பட்டன.

ஜூலை 16-ஆம் தேதி அஜா்பைஜானும் சோ்க்கப்படவுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இடம் பெறவுள்ள நாடுகளின் எண்ணிக்கை 75-ஆக உயரும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...