No menu items!

சாம்பியன்ஸ் கோப்பை! குழப்பத்தில் இந்திய அணி!

சாம்பியன்ஸ் கோப்பை! குழப்பத்தில் இந்திய அணி!

சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் அணிகளை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டும் தங்கள் அணிகளை அறிவிக்கவில்லை.

இதற்கு 2 காரணங்கள் முக்கியமாக கூறப்படுகின்றன. முதல் காரணம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம். கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமாகவில்லை. இந்த காயம் குணமானால்கூட, சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் மட்டுமே அவர் ஆடமுடியும் என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. அதனால் அவர் குணமாவதை உறுதிப்படுத்திக்கொள்ள இன்னும் ஒரு வாரம் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.

பும்ராவைப் போலவே நியூஸிலாந்து தொடரில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரில் ஆட முடியுமா என்பது இன்னும் ஒரு சில தின்ங்களுக்குப் பின்னரே தெரியவரும். எனவே அதுவரை, அதாவது வரும் 19-ம் தேதிவரை அணி தேர்வை தள்ளிவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கருதுகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் முக்கியமாக சுற்றுப்பயணங்களின்போது கிரிக்கெட் வீர்ர்கள் தங்கள் மனைவிகளையும், குடும்பத்தையும் தொடர் முழுக்க உடன் அழைத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க திட்டமிடுகிறது. மனைவியை உடன் அழைத்துச் செல்லும்போது வீர்ர்களின் கவனம் ஆட்டத்தின் மீது முழுமையாக இருக்காது என்பது பிசிசிஐயின் வாதம்.

இந்த முடிவை அமல்படுத்தினால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீர்ர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் மனைவியை தொடர் முழுக்க அழைத்துச் செல்வதே இதற்கு காரணம்.

அதேபோல் பயிற்சிக்கு தனிக் காரில் செல்லக்கூடாது, சக வீர்ர்களுடன் டீமின் பேருந்தில்தான் செல்ல வேண்டும். கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின்போது 150 கிலோ எடைக்கு மேல் கொண்டுசெல்லக்கூடாது. ஒரு தொடரில் சிறப்பாக ஆடாவிட்டால், அதற்கு ஏற்ப வீரர்களின் சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வீர்ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த கட்டுப்பாடுகளை ஏற்க சில வீர்ர்கள் விரும்பவில்லை. இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பீர்தான் காரணம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதனால் மூத்த வீர்ர்கள் பலரும் காம்பீர் மீது கோபமாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளர்களாய் இருந்த ஜான் ரைட்ஸ், கேரி கிர்ஸ்டன், ராகுல் திராவிட் போன்றவர்கள் வீரர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொண்டார்கள். தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள அவர்கள் நினைக்கவில்லை. அதனாலதான் அவர்களால் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடிந்தது. அதே நேரத்தில் முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சாப்பல் இந்திய வீர்ர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றதால் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

இப்போது காம்பீரும் சாப்பல் வழியில் நடந்து இந்திய அணியை படுகுழியில் தள்ளுகிறார் என்பது வீர்ர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுபோல் காம்பீரில் தனிப்பட்ட உதவியாளரும், இந்திய அணியின்மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணித் தேர்வாளர்களுடன் காம்பீர் அணித் தேர்வு குறித்து விவாதிக்கும்போது, காம்பீரின் உதவியாளரும் அதில் கலந்துகொள்வது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த குழப்பங்களும் இந்திய அணித் தேர்வில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...