கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவியும் நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளனர். மீதமுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நேற்று நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டன.
யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா. இவர் நடனக்கலைஞர் ஆவார். இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடி ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.
கிரிக்கெட் உலகின் சிறந்த தம்பதிகளாக இவர்கள் உலா வந்தனர். இந்த நிலையில், திடீரென இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். மேலும், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் சட்டப்பூர்வமாக ஒருவரையொருவர் விவாகரத்து செய்துள்ளனர். விவாகரத்து தொடர்பான பிற சம்பிரதாயங்கள் நேற்று நீதிமன்றத்தில் நிறைவடைந்ததாக . மும்பையின் பாந்த்ராவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு சாஹலும் தனஸ்ரீயும் அழைக்கப்பட்டுள்ளனர், நேற்று அங்கு மீதமுள்ள விவாகரத்து நடவடிக்கைகளை அவர்கள் முடித்து விவாகரத்தை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , சாஹலும் தனஸ்ரீயும் நேற்று மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான நிலையில் அங்கு அவர்களுக்கு அதிகாரப்பூர்வ விவாகரத்து சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிகிறது
மும்பையில் இருந்து வெளிவந்த தகவலின் படி யுஸ்வேந்திர சாஹலும் தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். பாந்த்ரா நீதிமன்றத்தில் இருந்த ஒரு வழக்கறிஞர் ஏபிபி செய்திகளிடம் பேசும்போது இதை உறுதிப்படுத்தினார். கடந்த சில் வாரங்களாக, சாஹல் மற்றும் தனஸ்ரீ பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன, ஆனால் இந்த வதந்திகள் இப்போது உண்மையாகி உள்ளன இருப்பினும், விவாகரத்து குறித்து இருவருமே இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.
விவாகரத்துக்கு முன் பதிவு
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் கடவுளுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டது அவர்களின் ஃபாலோவர்களின் கவனத்தை ஈர்த்தது.
சாஹல் தனதுஇன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “கடவுள் என்னை எண்ண முடியாத அளவுக்கு அதிகமான முறை பாதுகாத்துள்ளார். அதனால் எனக்கு தெரியாமல் எத்தனைமுறை நான் கடவுளால் மீட்கப்பட்ட நேரங்கள் எனக்குத் தெரியாதபோதும் எப்போதும் இருப்பதற்கு நன்றி, கடவுளே. ஆமென்” என்று எழுதினார்.