No menu items!

25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை

25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை

ஆபாச உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த வலைதளங்களை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் அவற்றை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, எப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு சட்ட விதிகளை மீறியதற்காகவும் இவை தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட தளங்கள் பட்டியலில் ஆல்ட், உல்லு, பிக் ஷாட்ஸ் ஆப், டெசிஃபிக்ஸ், பூமெக்ஸ், நவரசா லைட், குலாப் ஆப், கங்ன் ஆப், புல் ஆப், ஜால்வா ஆப், வாவ் என்டர்டைன்மென்ட், லுக் என்டர்டைன்மென்ட், ஹிட்பிரைம், ஃபெனியோ, ஷோஎக்ஸ், சோல் டாக்கீஸ், அட்டா டிவி, ஹாட்எக்ஸ் விஐபி, மூட்எக்ஸ், நியான்எக்ஸ் விஐபி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...