கார்லோஸ் அல்கராஸ் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் – நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் இருவரும் நேற்று பலப்பரீட்சை நடத்தினர்.
முன்னதாக நடப்பு சாம்பியனான சின்னர், அரையிறுதியில் தகுதிச்சுற்று வீரரான பிரான்ஸின் டெரென்ஸ் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், இளம் வீரரான அல்கராஸ் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை தோற்கடித்தார். இதனால், இருவரும் 14 வது முறையாக இறுதிப் போட்டியில் மோதினர்.
முதல் செட்டில் 23 நிமிடங்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
அப்போது சின்னர் திடீரென உடல்நலக் குறைவால் விலகினார். அவர் மீண்டும் களத்துக்குத் திரும்பவில்லை. இதனால், அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் தன்னுடைய முதல் பட்டத்தையும் அல்காரஸ் கைப்பற்றினார்.
சின்னர் – அல்கராஸ் இருவரும் இதுவரை 13 முறை இறுதிப் போட்டியில் விளையாடி, அல்கராஸ் 8 வெற்றிகளும், சின்னர் 5 வெற்றிகளும் பெற்றிருந்தனர். இந்த இறுதிப் போட்டியின் வெற்றியின் மூலம் நம்பர் ஒன் வீரர் சின்னரை வீழ்த்தி, தானும் சிறந்த வீரர் என அல்காரஸ் நிரூபித்து காட்டியுள்ளார்.
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு சாம்பியனான எம்மா ராடுகானுவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் அல்கராஸ் களமிறங்க உள்ளார்.