விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். அந்த பாடலின் வரிகள்…
நாம் என்ற வார்த்தைகொண்டு உயர்ந்தார் அண்ணா
நாடெங்கும் வாழ்த்த நாளை
ஜெயிப்பார் அண்ணா
வா நண்பா தமிழரெல்லாம்
சேர்ந்தோமென்னா
வாடாத வாழ்க்கை இங்கே தருவாரண்ணா..
அனுபல்லவி:
அடிமை வாழ்வு
போதும் போதும்
இனிமே நடக்க
இருக்கா ஏதும்…?
நாட்ட அழிச்சி
கூறு போடும்..
நரிகள் கூட்டம்
தெறித்தே ஓடும்…
ஊமையைப்போல்
நாமிருந்தா
ஊர்செழித்து
முன்னேறுமா..?
பேரலைபோல்
எழ மறந்தா
பேரவலம்
தொடரும் அம்மா..
சரணம்-01:
தமிழா தமிழா
பயந்து ஓடாதே…
தலைவன் தலைவன்
பிறந்தான் வாடாதே…
தடைகள் உடையும்
துயரம் தூளாகும்..
தயங்கி நின்றால்
விடிய நாளாகும்..
‘நாளைய தீர்ப்பு’
தந்தவன் பின்னே
நாளைய தமிழகம்
எழுந்து நிற்போமே…
நாடி நரம்பு
உயிர் உணர்வெல்லாம்
தளபதி விஜய்க்கே
என்றுரைப்போமே…
கவலை யாவும்
மறைந்து போக
இளைய கலைஞன்
எழுந்தான்..
எம்ஜியாரு
ரஜினிபோல
ஏழை மனதில்
கலந்தான்..
தமிழன் தனது
பெருமை மறந்து
ஆளும் தகைமை
இழந்தான்…
நமது தலைவன்
வாகைசூட
எழுமே எங்கள்
இனந்தான்…
நாடறிந்த பலரிருந்தும்
நமக்கெனவே
இங்கே யாருமில்லை..
ஏழசனம் மாலையிட
வந்தாரய்யா
“எங்க வீட்டுப்பிள்ளை”.!
சரணம்-02
தலைவா நீதான்
எங்கள் எதிர்காலம்
கோட்டை வென்று
போடு புதுக்கோலம்..
தமிழே தமிழே
எங்கள் அடையாளம்
ஒருநாள் தமிழும்
இந்த உலகாளும்…
தமிழன் பெருமை
தமிழன் உணர்ந்தால்
உலகில் உலகில்
அவன்போல் யாரு…?
எமக்குள் நாமே
சண்டைகள் செய்தால்..
தொடரும் எங்கள்
துயர் வரலாறு ..
கடந்தகாலம்
கடந்துபோச்சு
நடந்த கதைகள்
விடுவோம்..
இன்று நாங்கள்
இணைந்து நாளும்
புதியவிதைகள்
நடுவோம்
மக்கள் வாழ்வை
சுரண்டுவோரை
குப்பை மடுவில்
இடுவோம்..
மானமுள்ள
தலைவன் பின்னே
போனால் உயர்வை
தொடுவோம்..
மூன்றெழுத்தில்
எம் மூச்சிருக்கும்
அண்ணன் இன்றி
நாங்கள் இல்லை ..
வா திரண்டு
போர் தொடுப்போம்
எம்மை வெல்ல
இங்கு யாருமில்லை