No menu items!

அணியில் அஸ்வினுக்கு அவமானம்! – அப்பா அதிர்ச்சி தகவல்!

அணியில் அஸ்வினுக்கு அவமானம்! – அப்பா அதிர்ச்சி தகவல்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்திய அணியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக பெரிய அளவில் பேசப்படுகிறது.

இந்த சூழலில் இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அஸ்வினின் அப்பா ரவிச்சந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். “அஸ்வின் அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரது அறிவிப்பு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு வகையில் அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கருதுகிறேன்.
அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும். அவமானம் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்கு காரணமாக இருக்கலாம்” என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த்து. ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விராட் கோலி கேப்டன் ஆனதும் அஸ்வின் ஒதுக்கப்பட்டதாக ஒரு தோற்றம் எழுந்தது.

அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர். வேறு வழியில்லாத சூழலில் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் அதிகம் பயன்படுத்தப்பட்டார். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணியில் ஜடேஜாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில்கூட முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். 3-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சேர்க்கப்பட்டார். இனி இந்திய அணி உள்ளூர் போட்டியில் ஆட பல காலம் ஆகும் என்பதால் அஸ்வின் உடனடியாக கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அஸ்வின் அப்பா ரவிச்சந்திரனின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது.

தனது அப்பாவின் கருத்துக்கு விளக்கம் அளித்து அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், “”என்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது. அனைவரும் அவரை மன்னித்து, தனியே விடுங்கள்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சினைக்கு அஸ்வின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் மகிழ்ச்சியாக இல்லை – கபில்தேவ்

இந்த சூழலில் அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ““இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக ஏமாற்றத்தை தந்துள்ளது. அவரது முகத்தில் அந்த வேதனையை நான் பார்த்தேன். அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது வருத்தம் தான். அவருக்கு சொந்த மண்ணில் திருப்திகரமான ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அவர் கொஞ்சம் காத்திருந்து சொந்த மண்னில் ஓய்வை அறிவித்திருக்கலாம். அது குறித்து நான் அறிய விரும்புகிறேன். அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தேசத்துக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மகத்தான வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. இந்தியாவின் மேட்ச் வின்னரான அவருக்கு பிசிசிஐ பெரிய அளவில் ஃபேர்வெல் நடத்தும் என நான் நம்புகிறேன். நான் அங்கு இருந்திருந்தால் அவர் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...