No menu items!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அன்பில் மகேஸ் வெளியிட்டார்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அன்பில் மகேஸ் வெளியிட்டார்

தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

அதன்படி, 10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த அண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதன்படி தமிழ் பாடத்தில் 8, ஆங்கிலத்தில் 346, கணிதத்தில் 1996, அறிவியலில் 10838, சமூக அறிவியலில் 10,256 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: அதேபோல். பாடவாரியாக தேர்ச்சி விகிதமானது, தமிழ்: 98.09%, ஆங்கிலம்: 99.46%, கணிதம்: 96.57%, அறிவியல்: 97.90%, சமூக அறிவியல்: 98.49% என்றுள்ளது.

முந்தும் சிவகங்கை: தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களே இடம்பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in http://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...