பரபரவென முன்னுக்கு வந்தவர், விஜயுடன் ஜோடியாகவும் களம் கண்ட அமலா பால் இப்போது எங்கே இருக்கிறார் என்பதே கோலிவுட் ஆசாமிகளுக்கே தெரியவில்லை.
’ஆடை’ களைந்து நடித்தப் பின்னர் அமலா பால் தனது பிஎம்டபிள்யூ-வை நேராக விரட்டியது பாண்டிசேரிக்குதான். அங்கே ஆரோவில் கிராமம் பக்கம் செட்டிலாகி விட்டார்.
தனது ஆண் நண்பருடன் சேர்ந்த பிறகு, அமலா பால் எதையும் கண்டுகொள்வது இல்லை என்கிறார்கள். எதற்கெடுத்தாலும் நண்பரை கூடவே வைத்து கொண்டிருப்பதால், இவரைச் சுற்றி இருந்தவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்களாம். கஷ்டப்பட்டு நல்ல சம்பளத்துடன் பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்தாலும், வாய்ப்புகளைத் தேடிப்பிடித்து கொடுப்பவர்களுக்கான பணத்தை முறையாக கொடுப்பதில்லையாம். இதுவே நெருங்கிய வட்டாரம் விலகிப் போக காரணமாம்.
ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கழுத்தில் ருத்திராட்சம், அழகைக் காட்டும் லூஸான காட்டன் உடைகள், அவ்வப்போது ஸூம்பா பாணியிலான மூவ்மெண்ட்களுடன் புகைப்படங்கள், ஊர் ஊராக பயணம் செய்யும் ஸ்டேட்டஸ், கூடவே ஒரு நண்பர் என அமலா பால் இன்ஸ்டாக்ராமில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.
எந்த இலக்கும் இல்லாமல் வாழ்க்கையைத் தொலைத்து கொண்டிருக்கிறார் அமலா பால் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கலகலக்கும் தெலுங்கு சினிமா வேலை நிறுத்தம்!
தெலுங்கு சினிமாவில் ஆக்டிவ் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸ்ர்ஸ் கில்ட் அறிவித்திருக்கும் டோலிவுட் பந்த் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆக்டிவ் தெலுங்கு ஃப்லிம் ப்ரொடியூஸ்ர்ஸ் கில்ட் சினிமா ஷூட்டிங் தொடர்பான பிரச்சினைகளை கையாள ஒரு குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதில் பல முக்கியப்புள்ளிகளுக்கு இடமில்லை. மறுபக்கம் கில்ட் பரிந்துரை செய்திருக்கும் டோலிவுட் பந்திற்கு இதுவரையில் தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லையாம்.
குறிப்பாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சும் குடும்பங்களில் ஒன்றான ராமா நாயுடு குடும்ப வாரிசுகளில் ஒருவரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான வெங்கேடேஷின் அண்ணனுமான சுரேஷ் பாபு இந்த பந்தில் கலந்து கொள்ளவதாக இதுவரையில் வாயைத் திறக்கவில்லை. அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுக்கு மிக நெருக்கமான சுனில் நரங் இதில் ஆர்வம் காட்டவில்லையாம்.
பெருந்தலைகள் ஒதுங்க காரணம், முன்னணி ஹீரோக்களின் சம்பள விஷயத்தில் கில்ட் கெடுபிடி காட்ட இருப்பதுதானாம். மேலும் படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் போது உண்டாகும் வர்ச்சுவல் ப்ரிண்ட் ஃப்பி எனப்படும் விபிஎஃப் செலவை தயாரிப்பாளர்கள் தலையில் கட்ட கூடாது. அதை திரையரங்கு உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பேச்சு அடிப்படுகிறதாம்.
இதனால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டோலிவுட் பந்த் தொடங்குமா இல்லையா என குழப்பம் நிகழ்கிறதாம். டோலிவுட்டில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டால் அதனுடைய தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் விவரமறிந்தவர்கள்
திருமணத்திற்குப் பிறகும் தாராளம் காட்டும் நயன்தாரா
நடிகைகளை தூக்கி வைத்து கொண்டாடும் நம்மூர் ரசிகர்கள், அந்நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அப்படியே தடாலடி அவர்களை தூக்கி போட்டுவிட்டு தங்களது ரசனை, ஜாகையை வேறு நடிகை பக்கம் திருப்பி விடுவார்கள். இதனால் நடிகைகளின் மார்கெட் அதோகதியாகி விடும்.
இந்த திருமண சுழலில் தப்பிப் பிழைத்தவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டுமே. இதை நயன்தாரா நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் போலும்.
இனி தமிழ்ப் படங்களில் முத்தக்காட்சிகளுக்கு நோ..நெருக்கமான காட்சிகளுக்கு நோ.. சாயந்தரம் 6 மணிக்கு மேல் நோ கால்ஷீட் என்று நயன்தாரா சில பல கண்டிஷன்கள் போடுவதாக பேச்சுகள் கிளம்பின.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக திருமணத்திற்கு பிறகே தனது பாலிவுட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா. இதனால் அட்லீயிடம் பெரியளவில் கண்டிஷன்களை போடவில்லையாம். ஷாரூக் கான் ஜோடியாக அறிமுகமாகும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று நயன்தாரா தரப்பு கிசுகிசுக்கிறது.
நடந்து முடிந்த ஷெட்யூலில் எந்த வித கெடுபிடியும் இல்லாமல் சொன்னதை அப்படியே திரையில் வெளிப்படுத்தியிருக்கிறாராம் நயன்தாரா. ஆபாசமில்லாத கவர்ச்சி ஒகே என்று சிக்னல் கொடுத்திருக்கிறார்.