ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டமும் பரிசுத் தொகை ரூ.41.4 கோடியும் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார்.
இந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நேருக்கு நேர் மோதும் 3-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.