No menu items!

அச்சுதானந்தன் காலமானார்

அச்சுதானந்தன் காலமானார்

கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார்.

பின்​தங்​கிய மக்​களின் உரிமை​களுக்​காக வாழ்​நாள் முழுவதும் போராடிய​வரும் கேரள அரசியலில் முக்​கிய இடத்தை வகித்​தவரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், கடந்த 2019-ல் பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டதை தொடர்ந்து பொது வாழ்க்​கை​யில் இருந்து வில​கி​னார்.

கடந்த 2021 ஜனவரி​யில் நிர்​வாக சீர்​திருத்த குழு தலை​வர் பதவி​யில் இருந்து வில​கி​னார். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள தனது மகன், மகள் வீட்​டில் ஓய்வு எடுத்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்​பட்​டதை தொடர்ந்து திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில் கிசிச்சை பலனின்றி நேற்று பிற்​பகல் 3.20 மணிக்கு அவர் கால​மான​தாக மருத்​து​வ​மனை தரப்​பில் அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பொதுமக் களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறு​திச் ​சடங்​கு​கள் நாளை புதன்​கிழமை அரசு மரியாதையுடன் நடை​பெற உள்​ளது.

1940-ம் ஆண்டு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் உறுப்​பின​ராக சேர்ந்த வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், தனது அரசியல் வாழ்க்கையில் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 1957-ல் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செயலக உறுப்பினரானார். 1964-ல் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சியை விட்டு விலகி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சியை உரு​வாக்​கிய 32 தலை​வர்​களில் இவரும் ஒரு​வர்.

2006-ல் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணியை (எல்​டிஎப்) வெற்​றிப் பாதைக்கு அழைத்​துச் சென்று 2011 வரை கேரள முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார். 2011 தேர்​தலில் எல்​டிஎப் பிரச்​சா​ரத்தை வடிவ​மைத்து கூட்​ட​ணியை வழிநடத்​தி​னார். இரண்​டாவது முறை​யாக ஆட்​சி அமைக்கும் வாய்ப்பை குறைந்த வித்​தி​யாசத்​தில் இழந்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...