அலர்ஜிக்காக டாக்டரிடம் சென்று அடுத்த 17 மணி நேரத்தில் பெண் பிரசவித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது
இளம்பெண் ஒருவருக்கு அலர்ஜி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.. ஆரம்பத்தில் அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.. பிறகு அலர்ஜி பிரச்சனை அதிகமாகிவிடவும், மருத்துவமனைக்கு டாக்டரை சென்று சந்துள்ளார்.. அப்போதுதான் இந்த விநோத சம்பவம் நடந்து ஆஸ்திரேலியாவில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது. யாரிந்த 20 வயது இளம்பெண்?
4 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.. தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ் என்ற தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனால், கடந்த சில வாரங்களாகவே கில்ட்ஸுக்கு அடிவயிற்றில் வலி இருந்து வந்துள்ளது.. இதனால் கிட்னியில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.
பிறகு சில மாதங்களில் அடிவயிறு அதிகமாக வலித்தது.. எனவே, ஆஸ்டின், தன்னுடைய மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டாக்டர்கள் கில்ட்ஸை டெஸ்ட் செய்தபோதுதான், அவர் 8 மாத கர்ப்பம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.. உடனே வலி அதிகமாகிவிடவும், அப்போதே ஆபரேஷனும் செய்யப்பட்டது.
இப்போது மீண்டும் ஒரு ஆச்சரியம் நடந்தது.. கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருந்தன.. இந்த நிகழ்வு அமெரிக்காவில் அப்போது ஆச்சரியமாக பேசப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், தற்போது ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. கான்பெர்ராவை சேர்ந்த 20 வயது இளம்பெண் சார்லோட் சம்மர்ஸ்.. இவருக்கு அலர்ஜி பிரச்சனை இருந்துள்ளது.. எனவே, டாக்டரிடம் சென்றிருக்கிறார்.. அப்போது இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.
அலர்ஜிக்கு எதுக்காக கர்ப்ப பரிசோதனை? என்று கேட்டுள்ளார்.. எனினும், டாக்டர் சொன்னதால், டெஸ்ட் செய்துள்ளார்.. அப்போதுதான், இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.. ஆனால், உடனடியாக பிரசவம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.. அதன்படியே பிரசவமும் நடந்து, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதாவது, தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்வதற்காக சில மாதங்கள் முன்பு தான் 2 குடும்பத்தாரும் கலந்து பேசியிருக்கிறார்கள்.. இருவரும் நெருங்கி பழகியபோது, முன்னெச்சரிக்கையாக இருந்தாராம்.. மாதவிடாய் வழக்கமாகவும் இருந்ததாம்.. அப்படியிருந்தும் எப்படி கர்ப்பமானேன்? என தெரியவில்லை என்று டாக்டர்களிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.