No menu items!

ஃபெஞ்சல் புயலில் தப்பிய சென்னைக்கு காத்திருக்கும் சம்பவம் – உருவாகிறது ராட்சத புயல்!

ஃபெஞ்சல் புயலில் தப்பிய சென்னைக்கு காத்திருக்கும் சம்பவம் – உருவாகிறது ராட்சத புயல்!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்டோபர் மாதம் மத்தியில் சென்னையில் ஆரம்பித்த மழையானது தொடர்ந்து மதுரை, கோவை, ராமேஸ்வரம் என கொட்டோ கொட்டு என கொட்டியது. இந்நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் கஉருவான ஃபெஞ்சல் புயல் சென்னையை உரசி சென்று புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என 14 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. தற்போது மீண்டும் பலத்தோடு ஃபெஞ்சல் புயல் அரபிக்கடலில் முகாமிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் மழை கொட்டிய ஊர்கள் எல்லாம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 10ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மழைக்கான சாதகமான நிகழ்வு உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், “இன்று (4-12-2024) முதல் தமிழகத்தில் மழையின் தாக்கமானது படிப்படியாக குறையும், மீண்டும் வருகிற டிசம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு கடல் சார்ந்த நிகழ்வுகள் சாதகமாக உள்ளது. அதன் படி டிசம்பர் 10ஆம் தேதி முதல் 15 தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பதை தொடர்ந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு வலுவான புயல் சின்னம் உருவாகுவதற்கான சாதகமான நிலை உள்ளது.  இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு அல்லது 3 சுற்று மழை வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. அதில் ஒன்று வலுவாக தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழையாக இருக்கும். டிசம்பர் 12 முதல் 15ஆம் தேதி காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் நிகழ்வு தொடங்கும். அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பலத்த காற்று பாதிப்பு இல்லை” ” என ஹேமச்சந்திரன் கூறினார். 

மேலும், டிசம்பர் 3 வார இறுதியில் தென் சீனா கடல் பகுதியில் இருந்து வங்க கடலில் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த ஹேமச்சந்திரன், “தென் சீனா கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய புயல் சின்னம் வலு அதிகரித்து காணப்படும். ஏற்கனவே வர்தா, தானே போன்ற புயல்கள் எல்லாம் தென் சீனா கடல் பகுதிகளில் இருந்து தான் டிசம்பர் இறுதி நாட்களில் தமிழகத்திற்கு வந்துள்ளது. அந்த புயல்கள் எல்லாம் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களை பதம் பார்த்துள்ளது.

அந்த வகையில் டிசம்பர் 20ஆம் தேதி வரக்கூடிய நிலை உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. பருவமழை முடியவில்லை இன்னும் மழை உள்ளது என்பதை மக்களும் அரசும் புரிய வேண்டும். மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனா கடல் பகுதியில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வருகின்ற புயல்கள் எல்லாம் வலுவாக இருந்துள்ளது.

அடுத்தடுத்து வருகின்ற சலனங்கள் ஆந்திராவிற்கோ ஒடிசாவிற்கோ செல்ல வாய்ப்பில்லை . அல்லது குமரி கடல் வழியாக தெற்கே செல்ல வாய்ப்பில்லை. சென்னை முதல் நாகை  வரை உள்ள பகுதிகள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...