No menu items!

சென்னையைப் போல 4 மடங்கு: கடலில் கரையாமல் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

சென்னையைப் போல 4 மடங்கு: கடலில் கரையாமல் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

சென்னையைப் போல 4 மடங்கு பெரிய பனிப்பாறை கட்டி ஒன்று அன்டார்டிக் கடற்கரையில் இருந்து பிரிந்து 188 ஆண்டுகளாக கடலில் மிதந்து வருகிறது. A23a என்று இந்த பனிப்பாறை அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய இந்த A23a பனிப்பாறை கட்டி இப்படி கரையாமல் கடலில் மிதப்பது உலகின் தட்ப வெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். ஏன் இந்த பனிப்பாறை பிரிந்தது? கரையாமல் இப்படி மிதப்பது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அன்டார்டிக் கடற்கரையில் இருந்து 1986ஆம் ஆண்டு பனிப்பாறை பிரிந்து கடலில் மிதந்து வருகிறது. A23a என்ற இந்தப் பனிப்பாறையின் பயணம் நீண்ட காலமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பாறை சென்னையைப் போல 4 மடங்கு, லண்டனை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. அன்டார்டிக் கடற்கரையில் இருந்து பிரிந்த உடனடியாக பனிப்பாறை வேடெல் கடல்தரை மணலில் சிக்கிக்கொண்டது.

கடற்கரையில் இருந்து பிரிந்த பனிப்பாறை மீண்டும் கடலின் அடிப்பகுதியோடு இணையவில்லை. கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது.

ஒரு நிலையான பனித் தீவாக இருந்த இந்த பனிப்பாறை துளியும்கூட அங்கிருந்து நகராத நிலையில், 2020ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது.

இந்நிலையில், பெரிய நீர் சுழற்சியின் மையப் பகுதியில் இந்தப் பனிப்பாறை சிக்கிக் கொண்டு மீண்டும் நகராமல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழலில் சிக்கிச் சுழன்ற வண்ணம் இருக்கிறது.

கடந்த 1920ஆம் ஆண்டில் முதன்முதலாக சர் ஜி.ஐ.சர் ஜி.ஐ.(ஜியோஃபெரி இன்கிராம்) டெய்லர் இந்தச் சுழல் குறித்து விவரித்துள்ளார். கேம்பிரிட்ஜில் படித்த இவர் திரவ இயக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டார். பேராசிரியர் டெய்லர், சரியான சூழலில், நீரோட்டத்தில் ஏற்படும் தடை எவ்வாறு இரு வித்தியாசமான நீரோட்டங்களை உருவாக்கும் என்பதையும் அவற்றுக்கு மத்தியில் எவ்வாறு ஆழமான நீர் சுழற்சியை உருவாக்கும் என்பதையும் விவரித்துள்ளார்.

டெய்லர் காலம் (Taylor Column) என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்தச் சுழலில் இருந்து ஏ23ஏ பனிப்பாறை அவ்வளவு விரைவில் வெளியேறாது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, 100 கி.மீ வரை விரிந்துள்ள, பிரீ கரை எனப்படும் கடல் முகடு தடையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரீ கரையின் மேலேதான் நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுழலில் தற்போது பனிப்பாறை சிக்கிக் கொண்டுள்ளது.

எவ்வளவு காலத்திற்கு A23a இப்படி சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்?

இது குறித்து பதிலளித்துள்ள பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் பணிபுரியும் பேராசிரியர் மைக் மெரெடித், “யாருக்குத் தெரியும். ஒரு மிதவை கருவியை பேராசிரியர் மெரெடித், பிரீ கரையின் மற்றொரு பகுதியில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த இடத்தில் இந்த மிதக்கும் கருவியானது இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

கடல் தரையின் அமைப்பு பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதற்கு இந்தப் பனிப்பாறை ஒரு நல்ல உதாரணம். கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது, கடலில் உள்ள ஊட்டச்சத்துகள் கடல் உயிரினங்களுக்கு சரியாகச் சென்று சேர்வது உள்ளிட்ட அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்புவதில் இந்த நீரின் போக்கானது உதவுகிறது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...