No menu items!

3 மனைவிகள்… ரூ.30 ஆயிரம் கோடி சொத்து – இவர்தான் டோனல்ட் ட்ரம்ப்!

3 மனைவிகள்… ரூ.30 ஆயிரம் கோடி சொத்து – இவர்தான் டோனல்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களை பார்ப்போம்…

நியூயார்க் மாகாணத்தில் உள்ள க்வீன்ஸ் என்ற ஊரில் 1946-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் பிறந்தார். அவரது அப்பா ஃப்ரெட் ட்ரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளர். அவரது அம்மா மேரி ஆன் மாக்லியோட் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

வீட்டில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால், 13 வயதில் டொனால்ட் ட்ரம்பை அவரது அப்பா ராணுவப் பள்ளியில் சேர்த்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு பிடித்த விளையாட்டு கோல்ஃப். வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் அவர் கோல்ஃப் விளையாடச் செல்வது உண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் ட்ரம்புக்கு சொந்தமாக 20 கோல்ஃப் மைதான்ங்கள் உள்ளன.

உடற்பயிற்சிகளுக்கு எதிரானவர் டொனால்ட் ட்ரம்ப். அவர் எந்த உடற்பயிற்சியையும் செய்வதில்லை. நமது உடலில் உள்ள சக்தி பேட்டரியைப் போன்றது. உடற்பயிற்சி செய்வதால், அந்த சக்தி குறைந்துவிடும் என்பது ட்ரம்பின் நம்பிக்கை.

ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவுகள் மீது டொனால்ட் ட்ரம்புக்கு விருப்பம் அதிகம். அதிலும் குறிப்பாக மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், கேஎஃப்சி போன்ற நிறுவனங்களில் தயாராகும் துரித உணவுகளை அவர் விரும்பி உண்பார், காலை மற்றும் மதிய நேரத்தைவிட இரவு நேரத்தில்தான் அவர் உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்.

அரசியலில் நுழைவதற்கு முன் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ட்ரம்ப், பின்னர் விளையாட்டு அணிகளை வாங்குவது, புத்தகங்களை பதிப்பிப்பது, தொலைக்காட்சியில் ரியாலிடி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவது என்று ஏராளமான தொழில்களில் ஈடுபட்டார். அந்த துறைகளில் வெற்றியும் பெற்றார்.

அமெரிக்க அதிபர்களிலேயே மிகப்பெரிய பணக்காரராக டொனால்ட் ட்ரம்ப் இருந்துள்ள்ளார். 2017-ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.

டொனால்ட் ட்ரம்புக்கு மொத்தம் 3 மனைவிகள். இதில் இவானா, மரியா மேப்பிள்ஸ் ஆகிய இருவரை டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே விவாகரத்து செய்துள்ளார். இப்போது மெலனியா ட்ரம்ப் இவரது மனைவியாக இருக்கிறார். அவர்கள் மூலம் ட்ரம்புக்கு 3 மனைவிகள் உள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்களில் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக பிரதமர் மோடி இருக்கிறார். அவரது சமீபத்திய நெருங்கிய நண்பராக உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன் மஸ்க் உள்ளார். இந்த அதிபர் தேர்தலில் ட்ரம்பின் பிரச்சாரத்துக்கு அவர் பல கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கும் மிக வயதான மனிதர் என்ற பெருமை ட்ரம்புக்கு உண்டு. அடுத்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முரை பதவியேற்கும்போது, அவரது வயது 78-க இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...