சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகம் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பாலசரவணன், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்க, காதலர் தினத்துக்கு வந்திருக்கும் படம் ‘2கே லவ் ஸ்டோரி’.
தலைப்புக்கு ஏற்ப, 2 கே கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதை. அவர்களின் மனநிலை, நட்பு, காதல், கோபம், உளவியல் பிரச்னை, எதிர்கால திட்டமிடல் குறித்து இளமையாக பேசுகிறது.
ஸ்கூல் காலத்தில் இருந்தே ஜெகவீரும், மீனாட்சியும் ப்ரண்ட்ஸ். ப்ரி வெட்டிங் ஸ்டூடியோ நடத்துகிறார்கள். அந்த டீமில் புதிதாக சேரும் ‘90 கிட்ஸ்’ ஆன ஆண்டனி பாக்யராஜ், ‘‘அதெப்படி ஒரு இளம்பெண்ணும், ஆணும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்க முடியும். அவர்களுக்குள் காதல் இருக்கிறது’’ என்று சொல்கிறார். ‘‘அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை. நாங்க 2 கே கிட்ஸ், எங்க உலகம் வேறு என்கிறார் அந்த டீமில் இருக்கும்’’ பாலசரவணன். இதற்கிடையில், ஜெகவீரும், மீனாட்சியும் திருமணம் செய்ய க்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அவர்கள் நட்பு தொடர்ந்ததா? அல்லது அவர்கள் தம்பதியினர் ஆனார்களா என்பது கிளைமாக்ஸ்
இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, இளமை துள்ளலான 2 கே கிட்ஸ்வாழ்க்கையை , ஆபாசம் இன்றி, காமெடி கலந்து கதையை நகர்த்தியிருக்கிறார் சுசீந்திரன். 4 காதல்களை இந்த கதை அழகாக பேசுகிறது. 2கே கிட்ஸ், 90 கிட்ஸ் இடையேயான வித்தியாசங்களை கலகலப்பாக சொல்லும் சீன்கள் ரசிக்க வைக்கிறது. புதுமுக ஹீரோ தனது பணியை ஓரளவு சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
நட்பா? திருமணமா என்று தவிக்கும் சீன்களிலும், பாடல் காட்சிகளிலும் மீனாட்சி நடிப்பு அருமை. முதற்பாதி வேகமாக செல்கிறது. இரண்டாம் பாதி முழுக்க பெண் பார்க்கும் படலம், திருமணம் என நகர்கிறது. அதில் சிங்கம்புலி, ஜி.பி. முத்து டீம் திருமணத்தை நிறுத்துபவர்களாக காமெடி செய்து இருக்கிறது. அதில் சில சீன்கள் ஓகே. சில சீன் போராடிக்கிறது. பெண் பார்க்கும் படலம், திருமண சீன்கள் விறுவிறுப்பு.
இமான் பின்னணி இசை, பாடல்கள் ஓகே. யூத் ரசிக்கும்வகையில் பல காட்சிகள், பாடல், வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இப்போதுள்ள பெற்றோர்கள் மனநிலை, சமூக பார்வை, இளைஞர்கள் மீதான பெரியவர்களின் அவல நம்பிக்கை ஆகியவற்றை எளிமையாக சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். இதுதான் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை, காதல், நட்பு என்பதை, கலர்புல்லாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.