1978-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதிதான் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது. கிரஹாம் யாலெப் என்ற ஆஸ்திரேலிய வீரர்தான் கிரிக்கெட் போட்டியின்போது முதலில் ஹெல்மெட்டைப் பயன்படுத்தினார்.
முன்னதாக 1930-களில் ஹெல்மெட் போன்ற ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் 1977-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டென்னிஸ் அமிஸ், உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளின்போது, பைக் ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சற்று மாற்றி வடிவமைத்து, அதை அணிந்து ஆடினார். இதைத்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்ற விதத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்து கிரஹாம் யாலெப் பயன்படுத்தினார்.