திரையுலகில் போல்டான லேடி என்று பெயரெடுத்தவர் சமந்தா. தனக்கென்று ஒரு பாலிஸியுடன் வாழும் அவர், தனக்கு எதிராக யார் என்ன கருத்து சொன்னாலும் அதிரடியாக பதில் கொடுப்பது வழக்கம். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான சமந்தா, சில மாதங்களுக்கு முன் கணவர் நாகசைதன்யாவைப் பிரிந்தார். அதன்பிறகு தனிமையில் வாழும் அவர் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அவருக்கு நாய்களையும் பூனைகளையும் மிகவும் பிடிக்கும். இதுபற்றி சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒருவர், ‘சமந்தா பூனைகள் மற்றும் நாய்களுடன் தனிமையில் வாழ்ந்தே தனது வாழ்க்கையை முடித்துவிடுவார்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் கொடுத்து சமந்தா வெளியிட்ட பதிவில், “அப்படி நடந்தால் நான் அதிர்ஷ்டசாலியாக கருதுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தளபதி 66 – முதல் ஷெட்யூல் முடிந்தது!
விஜய் நடிக்க தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருக்கும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இப்படத்தின் முதல் ஷெட்யூல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. விஜய், ராஷ்மிகா மந்தானா சம்பந்தபட்ட முக்கிய காட்சிகள் இங்கு ஷூட் செய்யப்பட்டிருப்பதாக அப்பட குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
முதல் ஷெட்யூலுக்கு பிறகு 10 நாட்கள் ப்ரேக் விட திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த ப்ரேக்குக்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடர இருக்கிறதாம்.
இங்கு சென்னையில் விஜய் சம்பந்தபட்ட காட்சிகளை ஷூட் செய்ய இருக்கிறார்களாம். ராஷ்மிகாவும் சில நாட்களில் இங்கு வந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தும் கமல்
கமல் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் ‘விக்ரம்’ படம் சென்சாரியில் யூஏ சான்றிதழ் பெற்று, ஜூன் 3-ம் தேதி வெளியாவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் இருப்பதால் இப்படத்தை தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிஸினெஸ் செய்ய விக்ரம் படக்குழுவினர் மும்முரமாக இயங்கி வருகிறார்கள். இதற்கு இரு மொழி திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.
மலையாளத்தில் 200 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். பஹத் ஃபாசிலின் இமேஜ் 200 திரையரங்குகளை எளிதில் பெற்று தந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என தெலுங்கு பேசும் இரு மாநிலங்களிலும் இப்படத்திற்கு 400 திரையரங்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் தவிர்த்து இப்படத்தின் வரவேற்பைப் பொறுத்து என்.எஃப்.டி மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான வர்த்தகமும் சூடுப் பிடிக்கும் என விக்ரம் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.