No menu items!

மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

 ‘த்ருஷ்யம்’, த்ருஷ்யம் 2’, 12th man’ ஆகிய 3 வெற்றிப் படங்களைக் கொடுத்த மோகன்லால் – இயக்குநர் ஜீது ஜோசப் கூட்டணி, இப்போது நான்காவதாக ‘ராம்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.ஜூன் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

மலையாளத்தில் த்ரிஷா நடிக்கும் இரண்டாவது படம் இது. ஏற்கெனவே ‘ஹே ஜூட்’ என்ற மலையாளப் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, தனுஷ்கோடி, டெல்லி, கெய்ரோ, லண்டன், கொழும்பு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

தனுஷைக் கண்டு ஓடும் போனிகபூர்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை தான் நடித்து இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார் தனுஷ்.  இதற்கான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஈடுபட்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, தனது மகள் இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ஜான்வி கபூரின் அப்பா போனி கபூர்.

இதற்கு முன்பு பாலிவுட்டில் தனுஷ் நடித்து வெளியான ‘அட்ரங்கி ரே’ படத்திலும் ஜான்வி கபூர்தான் நாயகியாக நடிக்க இருந்தார். அவரிடம் ஏற்கெனவே  கதை சொல்லி படக்குழுவினர்  ஓகே வாங்கி இருந்தனர்.  ஆனால் படத்தின் நாயகன் தனுஷ் என்று தெரிந்ததும் ஜான்வி அந்த படத்தில் இருந்து நழுவியதாக கூறப்படுகிறது. இதற்கும் அவரது அப்பா போனி கபூர்தான் காரணம் என்கிறார்கள். ஜான்வி மட்டுமின்றி பல பாலிவுட் நடிகைகள் தனுஷுடன் நடிக்கச் சொன்னால் பின்வாங்குகிறார்களாம்.

அரேபிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் இயக்குநரான நயாலா அல் காஜா இயக்கும் ‘பாப்’ என்ற அரேபிய   படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவுள்ளார்.  தொலைந்துபோன தன் சகோதரியைத் தேடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகிறது. கான்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் இச்சூழலில், நயாலா அல் காஜாவுடன் அங்கு சென்று ‘பாப்’ படத்தின் புரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...