No menu items!

Exit Pollலில் முந்தும் பாஜக நிஜத்திலும் முந்துமா?

Exit Pollலில் முந்தும் பாஜக நிஜத்திலும் முந்துமா?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளின் தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்குகள் பதிவான நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது. ஒரு சில கருத்துக் கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி மார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 137 முதல் 157 வரையிலான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கருத்துக்கணிப்புகள்படி, மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 126 முதல் 146 இடங்களைப் பெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 2 முதல் 8 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதே பொல, பீப்பிள் பள்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 175 முதல் 195 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 85 முதல் 112 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 7 முதல் 12 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சி.என்.என் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 154 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 128 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 6 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது

லோக்ஷாஹி மராத்தி ருத்ரா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 128 முதல் 142 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 125 முதல் 140 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 18 முதல் 23 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மாட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 150 முதல் 170 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 110 முதல் 130 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 8 முதல் 10 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 45 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 33 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 3 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மாட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளின் படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 42 முதல் 47 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 30 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 1 – 4 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

பீப்பிள் பள்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 44 முதல் 53 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 5 – 9 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...