No menu items!

கமல் பாலிவுட்டிலிருந்து விலகியது ஏன்? – பின்னணி ரகசியம்

கமல் பாலிவுட்டிலிருந்து விலகியது ஏன்? – பின்னணி ரகசியம்

இந்தியாவின் பிரதமர் ரஜினிகாந்தை ஒரு விநாடி காத்திருக்கவிடாதபடி உடனடியாக சந்திக்கிறார்.
அயோத்தி ராமர் கோவின் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிக்கு பிரத்தியேக அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பதவியெற்பு விழாவில் முன்வரிசையில் ரஜினிக்கு இருக்கை அளிக்கப்படுகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களும் கூட ரஜினியைப் பார்த்தால் ‘தலைவர்’ என்று உற்சாகத்தோடு அழைக்கிறார்கள்.
இப்பேர்பட்ட ரஜினியை பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கவிடவில்லை. ’ஸ்டைல் கிங்’ ரஜினியாக அங்கே அறிமுகமானாலும், அவருக்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்புகளை வழங்க விரும்பவில்லை. முடிந்த வரை அவரை அப்படியே தமிழ் சினிமாவிற்கு திரும்பி அனுப்பிவிட வேண்டுமென்பதில் பாலிவுட் வட்டாரம் தெளிவாக இருந்தது.

1981-ல் ‘ஏக் துஜே கேலியே’ படம் மூலம் பாலிவுட்டிற்கு சென்றார். ’நடிப்பு மன்னன்’ என்று பாராட்டிய இந்தி சினிமா வட்டாரம் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் இவரும் தமிழ் சினிமாவிற்கே திரும்பிவிட்டார்.

ஷங்கரும் அனில் கபூரை வைத்து ‘நாயக்’ என்ற பெயரில், தமிழில் பெரும் ஹிட் அடித்த ’முதல்வன்’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார். அவர் வெற்றிப் பெற்றுவிட கூடாது என பாலிவுட் மாஃபியா, அந்தப் படத்தை கேபிள் டிவியில் ஒளிப்பரப்பினர். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம். ஷங்கரும் அதற்குப் பிறகு பாலிவுட் பக்கம் போகவே இல்லை.

ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து ஹிட் கொடுத்தாலும், இவரது துள்ளலான இசைக்காகவே பல இந்திப் படங்கள் ஓடினாலும், இவரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு சினிமா நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானை மேடையில் வைத்தே கிண்டலடித்தார் சல்மான் கான்.

இப்படி தொடர்ந்து நக்கலும், கிண்டலும், பிரிவினைவாதமும் இந்த தலைமுறை ராம் சரண் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அம்பானி வீட்டு விழாவில் மேடையில் எல்லோரையும் கிண்டலடித்து கலாய்த்து கொண்டிருந்த கான் வகையறா, ராம் சரணை மேடைக்கு அழைக்கு போது ’சாம்பார்’ என்று நக்கலாகவே அழைத்தனர். ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற வெற்றிப்படம் கொடுத்து, பாலிவுட் நடிகர்களை பொறாமைப் பட செய்திருந்த, ராம் சரண் கொஞ்சம் கூனிகுறுகிதான் போனார்.

இப்படி வடக்கு நட்சத்திரங்களும், படைப்பாளிகளும் தென்னிந்திய நட்சத்திரங்களை குறிப்பாக நடிகர்களை, இயக்குநர்களை வளரவிடுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டை விட்டு வந்தது ஏன் என்று கமல் ஹாசன் மனம் திறந்திருக்கிறார்.

‘அந்த காலம் அப்படிதான் இருந்தது. அதேநேரம் இந்தி சினிமா பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்தி சினிமாவின் ஏழை சகோதரன் நான். அவர்கள் ஒரு படத்தை இரண்டரை வருடங்கள் எடுப்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் 6 படங்களை எடுத்து கொண்டிருப்பார்கள். இப்படி படம் பண்ணும் போது, நாம் நடிக்கும் கதாபாத்திரத்தை அதற்கான நியாய ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி நிறைவாக செய்ய முடியாது’ என்கிறார்.

இது ஒருபக்கம் என்றால், நிழல் உலக தொடர்புகளும் பாலிவுட்டில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. யார் நடிப்பது, யார் யாருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும், யார் தயாரிக்க வேண்டுமென நிழல் உலக மாஃபியாதான் பாலிவுட்டை தீர்மானிக்கிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது பற்றி குறிப்பிடுகையில், ‘அங்கே நிழல் உலக தொடர்புகள் எக்கச்சக்கமாக இருக்கும். அதனால் அவர்கள் எதிர்க்கவோ அல்லது அவர்களுடைய பயமுறுத்தலுக்கு பயந்தோ அங்கே இருக்க நான் விரும்பவில்லை

கருப்புப் பணத்துடன் எந்தவிதமான செயலையும் செய்ய விரும்பாத நடிகர்களில் நானும் ஒருவன். எந்தவிதமான ஊழலும் செய்யாமல் பெரிதாக செய்ய முடியும் என்றால் அதற்கு உதாரணமாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.’ என்று மனம் திறந்திருக்கிறார்.

கமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சரிகாவும் பாலிவுட்டுக்கு திரும்பி போய்விட்டார். அவருடைய இரு மகள்களான ஷ்ருதி மற்றும் அக்ஷர இவர்கள் இருவராலும், பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் வடக்கில் இருந்து வந்த நடிகைகளுக்கு கோயில் கட்டி கூட ஆராதித்து இருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். தெலுங்கு சினிமாவிலும் இந்தி பேசும் நடிகைகள் முன்னணியில் இருந்திருக்கிறார்கள்.

அப்படிப்பார்க்கையில், தென்னிந்தியாவிலிருந்து வடக்கே படையெடுத்த ரேகா, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா போன்ற ஒரு சில நடிகைகளை மட்டுமே பாலிவுட் ரசிகர்களும், படைப்பாளிகளும், நடிகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அறியப்படும் நீதி என்பது பெண்கள் விஷயத்தில் அதுவும் நடிகைகள் என்றால் ரசிகர்கள் அவர்களை எந்த வெறுப்பும் இல்லாமல் வரவேற்கிறார்கள் என்பதே.

இந்தளவிற்கு வெறுத்துப் போன கமல், ஒரு பெண்ணாக பிறந்திருந்தால்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...