எஸ்.ஏ.சி-திடீர் முடிவுதமிழ் சினிமாவில் சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் அருணாச்சலம் சாலைக்கு என்று ஒரு பெரிய வரலாறே இருக்கிறது இந்த அருணாச்சலம் சாலையில்தான் பிரசாத் ஸ்டூடியோ இன்றும் இருக்கிறது. இங்கிருந்த மோகன் ஸ்டூடியோ, அருணாச்சலம் ஸ்டூடியோ இவை இரண்டும் காலப்போக்கில் மாறிவிட்டன.
இந்த ஸ்டூடியோக்களைத் தாண்டி மற்றுமொரு லேண்ட் மார்க் ஆக இருந்து வந்தது ஷோபா கல்யாண மண்டபம். விஜயின் அம்மா ஷோபா பெயரில் இருக்கும் முன்பு இந்த கல்யாண மண்டபத்தில் விஜயின் ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. தனது ரசிகர்களை விஜய் இங்கு சந்திப்பது வழக்கம். எஸ்.ஏ.சி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இங்கு ஆலோசனைகள் செய்வதும் அவ்வப்போது நடக்கும்.
இப்படி விஜய் ரசிகர் மன்ற விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்த ஷோபா கல்யாண மண்டபம் இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனை நிலையமாக மாறியிருக்கிறது.
சில ஆண்டுகள் முன்புவரை விஜய் ரசிகர் மன்றத்தின் பவர் சென்டராக இருந்த ஷோபா கல்யாண மண்டபம் இப்பொழுது தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட என்ன காரணம் என ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகமானதுதான் காரணமா அல்லது தொடர்ந்து மாத வாடகை வருமானம் வந்தால் தங்களுக்கு உதவும் என எஸ்.ஏ.சி. எடுத்த முடிவா என சாலிக்கிராமத்தில் இருக்கும் டீக்கடைகளில் சூடான விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன..
vijay, #sac, #thalapathy, #shoba, #vijaycontroversy,