No menu items!

Weekend ott – என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – என்ன படம் பார்க்கலாம்?

Adios amigo ( அடியோஸ் அமிகோ –மலையாளம்) – நெட்பிளிக்ஸ்

இதுவும் ஒரு பயணக் கதைதான். கமல் நடித்த அன்பே சிவம் படத்தைப் போல், வித்தியாசமான இரு மனிதர்களின் பயண அனுபவத்தைக் கொண்ட படம்தான் அடியோஸ் அமிகோ. நஹாஸ் நசர் இயக்கியுள்ள இப்படத்தில் ஆசிப் அலியும், சூரஜ் வெஞ்சாரமூடும் நடித்துள்ளனர்.

அம்மாவின் சிகிச்சைக்காக பணத்துக்கு அலையும் சூரஜ் வெஞ்சாரமூடும், பணக்கார குடும்பத்தில் பிறந்து விட்டேற்றியாக ஊர் சுற்றும் ஆசிப் அலியும் ஒரு பேருந்து நிலையத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் என்ன? ஊதாரியான ஆசிப் அலி திருந்தினாரா?, சூரஜ்ஜின் அம்மாவின் சிகிச்சைக்கு பணம் கிடைத்ததா என்பதுதான் படத்தின் கதை.

பெரிய அளவு திருப்பங்கள் ஏதும் இல்லாத ஜாலியான ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

போகுமிடம் வெகு தூரமில்லை (தமிழ்) – அமேசான் ப்ரைம்

பயணத்தை அடிப்படையாக கொண்ட, ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்தில் விமல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சடலத்தை எடுத்துச் செல்கிறார் அமரர் ஊர்தி ஓட்டுநரான விமல். அவரிடம் லிப்ட் கேட்டு ஏறிச் செல்கிறார் கருணாஸ். இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.

காமெடி நடிகராகப் பார்த்த கருணாஸ், இப்படத்தில் குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்க்கிறார்.

Manwat murders (மன்வாத் மர்டர்ஸ் – மராத்தி) – சோனி லைவ்

நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்ட மன்வாத் மர்டர்ஸ் வெப் தொடர், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மன்வாத் என்ற ஊரில், 1971-72 வாக்கில் அடுத்தடுத்து 7 பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அந்த கொலை வழக்கை விசாரித்த போலீஸ் துணை கமிஷனரான ரமாகாந்த் குல்கர்னி எழுதிய சுயசரியை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும் இல்லாத இந்த வெப் தொடரில், நாயகனான ரமாகாந்த் குல்கர்னி, தன் சமயோசித மூளையை வைத்து கொலை வழக்கை துப்பறிகிறார்.

Sarfira (சர்ஃபிரா – இந்தி) – டிஸ்னி ஹாட் ஸ்டார்

தமிழில் சூர்யா நடித்து வெளியான ‘சூரரைப் போற்றி’ படத்தின் இந்தி ரீமேக்தான் சர்ஃபிரா.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவர், விமான போக்குவரத்து துறையில் ஜெயிக்கும் கதைதான் சர்ஃபிரா. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் ஏற்று நடித்துள்ளார். சுதா கோங்குரா இயக்கியுள்ள இப்படத்தில் பர்வேஷ் ராவல், ராதிகா மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...